சரணங்கள்
அந்தணர்தங்க ளுடன்புல வோருக்கும்
அனைவர்க்கும் பொன்னு மணியு மிகக்கொண்டு
சந்த்த முஞ்சொரி யன்னவர் கைம்மலர்
தனிலுற் றிருந்திடும் ரேகையெல்லாங்கண்டு
முந்திடு மாதிரை நாளி னுதித்திட்டீர்
முன்னுங் கவியுடன் பொன்னும் பதினொன்றிற்
சுந்தரமாகவி ருந்தத னால்வெகு
சுகத்துடன் சிரஞ்சீவி யாயிருப் பீரென்றேன் (மன்)
மகுடரே கையுடன் விஜய ரேகையும் வளம்
வாய்த்திடு பாக்கிய ரேகைய துவுமேலே
தகவினுற் றிடுமுயர் புகழினுடன் வித்தை
தருமணி ரேகையு மருவின வதனாலே
புகழுட னிப்புவி யாளுவீர் செல்வமும்
புகழும் வெற்றியும்பெற் றிந்திரன் போலே
அகமகிழ் கொண்டென் றுரைத்தே னதனுக்கென்
அகமகிழ வெய்தவே யுதவினர் மெத்தவே (மன்)
இலங்கிரு சால்வையு முயர்முத்து மாலையும்
ஏறுஞ் சிவிகையு மீராயி ரம்பொன்னும்
நலங்கொள் கடகமும் பலவர்ணச் சேலையும்
நவிலும்பொற் காறையும் நல்கி யதன்பின்னும்
புலன்கொண் மதிதோறு மிருப திருபது
பொன்னும் பெறும்படி யருள்செய்த னர்துன்னும்
வலன்கொண் டிடுவிளை ரிலமு முதவினர்
மகிழ்ச்சியு டன்கொண்டு வணக்கமுற் றேன்முன்னம் (மன்)
மோகினி வசனம்:- ஏகுறமாதே இத்தனை யெல்லாம் சொன்னநீ என் கையையும் பார்த்து குறிசொல் கேள்போம் உனக்கு வேண்டிய வெகுமதிகள் கொடுக்கிறேன்.
|