பக்கம் எண் :

48

         வண்ணமாரொரு மராடமாது மஜ
             ஹாத்பஹாக வென்றாள்
         மற்றவட்கிசை கைக்குறிக்கவள்
             வச்சிரத்தொடி தந்தாள்                       (சொன்ன)

         கண்ணி யிங்கொரு கன்னடப் பெண்நன
             கையினநோடே யென்றாள்
         கருதவட்கிசை குறிதனக்கவள்
             காதினோலை யளித்தாள்                      (சொன்ன)

         அண்ணலங்கொளோர் துலுக்கவஞ்சி மேரா
             ஹாத் தேக்கர் போல் னாஎன்றாள்
         அன்னகைக்குறி சொன்னதற்கவள்
             மின்னிடார மளித்தாள்                       (சொன்ன)

         ஒண்ணுதல்பெறு மிங்கிலீஷ்மா
             தொருத்தி லுக்மைஹாண் டென்றாள்
         ஓதினேனவள் பாணிரேகைகண்
             டுதவினாளிந்த மேகலை                      (சொன்ன)

     குறத்தி வசனம்:- அம்மே! இந்த நாட்டையாள்ற சரபோஜி மகராஜா
 கொடுத்த வரிசை சொல்றே கேளு

___

குறத்தி பாட்டு
___

 ராகம்-தன்யாசி]             பல்லவி.             [தாளம்-சாபு
        

         மன்னர் சரபோஜி மகராஜ ரெனக்கீந்த
         வரிசையைக் கேளடி மானே

அனுபல்லவி.

         அன்னம் வளர்ச்சோலை மன்னுமுயர் தஞ்சை
         அணிநகர் தனின்மேவுந் தனபதி யெனச்சொல்லும்      (மன்னர்)