பக்கம் எண் :

47

அனுபல்லவி.

     கொங்கு தேசமுத லெங்கு மேகிமுன்
         குறியு ரைத்தன னங்கே
     கோதை மார்மன மகிழ்ந்து மாநிதி
         குலவு நற்றுகி லீந்தார்                            (சொன்ன)

சரணங்கள்

     கங்கைமாதினுக் குனக்கொர்காதலன்
         கைக ளாறிரண் டுடனே
     கடிது தோன்றுவ னெனவு ரைத்தனன்
         சுடிகை யின்னது தந்தாள்                         (சொன்ன)

     மங்க ளங்கொள்சீ மந்தினிக்குன்
         மணாளன் வந்திடு மென்று
     மலர்க்கை பார்த்துரைத் தேனெனக்கவள்
         கனத்த பொற்குட மீந்தாள்                        (சொன்ன)

     அங்கையற்கணாள் செங்கை பார்த்துமே
         லரனு னக்கிறை யாவனென்
     றறிந்துரைத்தனன் மகிழ்ந்தெனக்கவ
         ளளவிலா வரிசை தந்தாள்                        (சொன்ன)

     தண்மலர்ப்புன லகழிசூழ்ந்திடுந்
         தஞ்சையாமிது தன்னில்
     தாமரைத்திருக் கோயின்மேவிய
         தையல்போல்வளர் மின்னே                       (சொன்ன)

     நன்னிடங்கொரு தெலுங்கமானினி
         நாசெய்சூடெனச் சொன்னாள்
     நாடிநற்குறி யோதினேனிந்த
         நாசிகாபரண மீந்தாள்                            (சொன்ன)