நன்ன கரின்புற மெங்கு மலர்க்காவும்
நளினத் தடாகமு நதியும் வயல்களிற்
கன்ன லெனச்செழுஞ் செந்நெல் பொலிந்திடும்
கன்னல்கள் யாவுங் கமுகி னெழுந்திடும்
மின்னிடை யார்துடை காட்டுங் கதலியும்
மேனியழகினைக் காட்டுந் தளிர்மாவும்
அன்னவர் கொங்கை யெழில்காட் டிளநீர்கள்
அங்குறு தெங்கமு மெங்கு நெருங்கிடும் (சோழ)
___
மதனவல்லி குறத்தி பெற்ற வரிசைகளைச்
சொல்லும்படி கேட்டல்.
___
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
பலகலைக ளுணர்ந்ததஞ்சைச் சரபோஜி மன்னவர்தம்
பார்மேலுள்ள
மலைவளமே முதலான வளங்களெலா மெடுத்தெனக்கு
வளமாச்
சொன்னாய்
சிலைவளங்கொ ணுதலணங்கே யென்னவென்ன
தேசங்கள் சென்றாயங்கே
இலகெவர்க்குக் குறியுரைத்தா யவர்களென்ன
கொடுத்திட்டா ரிசைவாய் சொல்லே
___
குறத்தி தான்பெற்ற வரிசைகளைக் கூறுதல்.
___
குறத்தி பாட்டு.
ராகம் - சுத்தசாவேரி] பல்லவி. [தாளம் - ஆதி
சொன்ன குறிகளும் பெற்ற வரிசையுஞ்
சொல்லுகி றேனடி கண்ணே.
|