பக்கம் எண் :

தோற்றுவாய்1


                     தோற்றுவாய்

     ளவற்ற அருளாளன். அலகிலா அன்புடையோன். அகிலம்
அனைத்துக்கும் அதிபதி. அடக்கி ஆள்பவன். அந்தரங்கங்களை அறிபவன்.
அன்னம் அளிப்பவன். அனுதாபமுடையவன். அதிகாரி, அனந்திரன்.
அரசாங்கமுடையவன். அனைத்தும் அறிந்தவன். அரிதினும் அரியவை
அமைப்பவன். அண்மியோரின் அல்லல் அறுப்பவன். அகதிகள் அநாதைகள்
அனைவருக்கும் அளி செய்பவன். அச்சம் அகற்றுபவன். அறிவூட்டுபவன்.
அல்லாஹுத் தஆலா.

     ற்றல் மிக்கவன். ஆண்டவன். ஆலம் அடங்கலுக்கும் நாயகன்.
ஆதியானவன்.

     ராஜன். இம்மை மறுமை இரண்டிலும் இதமான இக பர இன்பங்களை
இவனியில் இருக்கும் இனியவருக்கு இலகுவாக்கும் பொருட்டு இறுதித்தூதர்
(இ) றசூலுல்லாஹ் மூலம் இறைத்தவன். இறைவன். இஸ்லாத்தை இயற்றியவன்.
இணை துணையற்றவன். இறுமாப்புக் கொண்டவனை இழிவுபடுத்துபவன்.
இபாதத்துடைய இட்டமுடையோரை- இரந்தேத்துவோரை இரட்சிப்பவன்.

     மான் கொள்ளப்படவேண்டிய ஈடிணையற்றவன். ஈடுபாடுடையோருக்கு
ஈருலகிலும் ஈபவன். ஈகையினால் ஈடேற்றம் ஈட்டச் செய்பவன். ஈனவரான
ஈனரையும் ஈர்க்கும் ஈர்ப்புடையோன்.

     ருவமைப்பவன். உயர்த்துபவன். உகப்பவன். உயர்ந்தவன்.
உண்மையானவன். உயிர்ப்பிப்பவன். புதிதாய் உண்டாக்குபவன். உயர்ச்சி
பெற்றவன். உஞற்றுவோருக்கு உதவுபவன். உலகம் உய்ய உம்மி நபியை
உதாரண புருஷராய் உதிக்க உதவியவன். உலகோருக்கு உபகாரியாக
உள்ளவன். உயிரை உரியமுறையில் உருவாக்குபவன். உலகருக்கு
உணவளிப்பவன். உவப்புடையோரை உவப்பவன். உலக உவகையால்
உள்ளழிந்து உழலுபவனை உறுத்துபவன்.

     க்கம் ஊட்டி ஊக்குபவன். ஊழி முதல்வன். ஊணழிப்பவன்.
ஊனவனின் ஊனக்கண்ணுக்கு அப்பாற்பட்டவன்.

     க்கசக்கம் எதுவுமில்லாமல் எகின் (நம்பிக்கை) வைத்தற்குரியவன்.
எழுப்புபவன். எங்கும் தரிபாடானவன். எம்மை எச்சரிக்கும் எசமான்.
எஞ்ஞான்றும் எம்மான் என்று