|
புலவர்கள் தஞ் சொல்லையும்
புகழையும் யாண்டும் பரத்தற்குக் கூடி
இனிதாய் வீற்றிருக்கு மவைக்களத்தை நெருங்கி,
ஆண்டு
யான் யாத்த கவி அரங்கு ஏற்றி - அங்கே யான்
கட்டிக்கொண்டு சென்ற கவியை யரங்கேறச் செய்து,
வருமொழியகரமாகலின்,
குற்றுகரமிகரமாயிற்று.
உலகு
சொல் சிறப்பு பெயர் ஒடு பெறாஅ வரிசை ஆன்ற பரிசில் உம்
பெறூஉ - உலகம் புகழ்ந்து சொல்லுஞ் சிறப்புப் பெயருடனே வேறொருவரும்
பெறாத வரிசை சிறந்த பரிசில்களையும் பெற்று,
கண்டு
அறிந்தவர் ஏ யாஅர் என வந்தனென் - முன்னமே
யென்னைக் கண்டறிந்துள்ளார் இப்போது கண்டு என் வேறுபாட்டால்
இவன் யாரென்று மருளும்படி வந்தேன்;
ஏ
- அசை; பிரிநிலையுமாம்.
நீயிர்
உம் ஆண்டு செல்லியர் பல பெற மேயினிர் எனின் ஏ -
நீவிரும் அங்கே சென்று சிறப்புப் பெயரும் பரிசிலுமென்னும் பலவற்றையும்
பெறுதற்கு விரும்பினீராயின்,
ஏ
- அசை.
இன்னே
இவண் விட்டு - இப்போதே இவ்விடம் விடுத்து,
கால்
இல் செல்லின் நாள் இல் செல்லும் - காலாலே நடந்து சென்றால்
நாளிற் பலகழியுமாதலால்,
காலில்
- உருபுமயக்கம்.
உரும்
உறுமு ஓடு உறழ் ஒலி இன் இருப்பு உருளை நான்கு இரு
புறன் உம் உருள - இடியின் சத்தத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தையுடைய
இரும்புருளைகணான்கு இரண்டு பக்கத்து முருளவும்,
உறுமு
- முதனிலைத் தொழிற்பெயர்.
கான்
குழுமும் கொள்ளி வாஅய் பேஎய் உயிர்ப்பு இன் ஒலித்து
உமிழும் கலி தூமம் குழல் வாய் இல் சுழல் கொள்ள - வனத்திற் கூடின
கொள்ளிவாய்ப் பேயின் மூச்சையொப்பவொலித்து
|