பக்கம் எண் :

28 புலவராற்றுப்படை

     கண்ணியனென்னுங் குறிப்புமுற்றுப் பெயரெச்சமாய் நின்றது.

     கேட்டனென்-நான் கேள்விப்பட்டேன்;

     அன்றே என் கவற்சி கெட்டது - கேட்டவப்பொழுதே என் கவலை
யொழிந்தது;

     வேட்டன அடைதல் விளிவு உறாது ஆல் என - நாம் விரும்
பினவற்றையடைதல் கெடுதலுறாதென்றெண்ணி,

     ஆல்-அசை.

     கதுமென எழுஉ - விரைந்தெழுந்து,

     சினை கொள் புதுமலர் - கொம்புகள் தம்மிடத்துக்கொண்ட புதிய
பூக்கள்,

     வண்டும் தேனும் உண்டன களிப்ப - ஆண்வண்டும் பெண் வண்டு
முண்டுகளிப்படைய,

     உண்டனவென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

     நற விருந்து அளிக்கும் புறவு உழ்ற சோலை - தேனை விருந்தாகக்
கொடுக்கின்ற காட்டோடு மாறுபட்ட சோலைகளையுடைய,

     நற - குறியதன்கீழாக் குறுகியது.

     வளன் அறவு அறியா மல்லல் அ முது நகர் மாண்பு உற புகூஉ
-செல்வமறுதலையறியாத வளமுள்ள அந்த மதுரையென்கிற முதிய
பட்டணத்தில் மாட்சிமைப்படச் சென்று,

     காண்பன கண்டு - அங்கே காணத்தகுவனவற்றைக் கண்டு,

     செந்தமிழ் விளங்கும் அ சங்கம் போஒய் - செவ்விய தமிழ்
விளங்குகின்ற அந்தச் சங்கத்திற் போய்,

     ஈண்டுச் சங்கமென்றது அதன் சாலையை.

     நல் இசை புலவர் சொல் இசை பரப்ப கூண்டு இனிது இருக்கும்
அவை களம் குறுகி - நல்ல புகழையுடைய அச்சங்கத்துப்