பக்கம் எண் :

இதன்பொருள்27


     புறங்காண் திறலினனென்க.

     புலவர் வம்மின்-புலவீர் வருதிர்,

     பொருநர் வம்மின்-பொருநர்காள் வருதிர்,

     பலர் புகழ் கூத்தர் உம் பாணர் உம் வம்மின்-பலரும் புகழ்கிற
கூத்தரும் பாணருமாகிய நீவிரும் வருதிர்,

     இ புரவலன் வாயில் போரா கதவது என-இந்தப் புரத்தல்வல்லானுடைய
தலைவாசல் ஒன்றை யொன்று பொருந்தாத கதவினையுடையதென்று,

     ஒன்றையொன்று பொருந்தாதவென்றது இரண்டு கதவுகளுஞ் சேராததை;
என்றால், அது மூடப்படாத கதவென்பது. தம்மிற் சேர்ந்த கதவென்பதைப்
போர்க்கதவென்றார் பட்டினப்பாலையிலும்.

     எர் ஆர் வான் கொடி நுடங்குபு நுடங்கி அகவு ஐ அம் மாடத்து
முகவை ஊரன்-அழகு நிறைந்த சிறந்த கொடிகள் அசைந்தசைந்து
கூப்பிடுகின்ற அழகிய மாடங்களையுடைய முகவையென்னு
மூரையுடையவனும்,

     அடுக்கு-விரைவுப்பொருட்டு, ஐ-அசை. முகவை-இராமநாதபுரம்.

     மேல் அறிவு உயர்ந்த நூல் அறி புலவன்-மேன்மையான அறிவுயர்ந்த
நூல்களையறிந்த புலவனும்,

     முத்தம் விளை வயல் பாலவனத்தம் நாடு செகில் கொண்டு-முத்து
விளைகின்ற வயல்களையுடைய பாலவனத்தமென்னு நாட்டினைத் தோண்மேற்
சுமந்து,

     பீடு கெழு குடி தழீஇ-அங்குள்ள பெருமை மிக்க குடிகளைத் தழுவி,

     முற்ற காக்கும் கொற்றம் குடையினன்-முழுதுங் காக்கின்ற வெற்றிக்
குடையினை யுடையவனும்,

     விரை கமழ் கண்ணியன் பாண்டித்துரை என-மணங்கமழ்கின்ற
மாலையினை யுடையவனுமாகிய பாண்டித்துரைத் தேவனென்று பலர் சொல்ல,