|
முறை
பிறழ்ந்து உற்ற குறை பல் காண்மார் முதுநூல் தேண்டி பழுது
ஆய்ந்து அமைக்க-ஒழுங்க மாறுபட்டுவந்த குற்றம் பலவற்றையுங் காண்பவர்
பழையநூல்களைத் தேடிப் பழுதாராய்ந்து திருத்தியமைக்கவும்,
குற்றம்
போகிய கற்றன கெடாஅ பேணூஉ வைகுமோர் பரிக்கை
காணூஉ-குற்றந்தீரக் கற்றனவற்றைப் பேணிவைத்திருப்போரைப் பரிக்கை
கண்டு,
போகிய-வினையெச்சம்.
சிறப்பு
பெயர் ஒடு பரிசில் உம் அளிப்ப-சிறப்புப் பெயரியும்
பரிசினையுமவர்க்குக் கொடுக்கவும்,
பின்
உம் வேண்டுவ என்ன உம் புரிய-மறுபடியும் வேண்டுவன
எவற்றையுஞ் செய்யவும்,
இவ்வெச்சங்களில்
உம்மைகடொக்கன.
மங்கல்
இல் அரும் தமிழ் சங்கம் ஒன்று இரீஇனன்-மங்குதலில்லாத
அரிய தமிழ்ச் சங்க மொன்றை யிருத்தினன்;
நிமிர்
திரை முரியும் குமரி மருங்கு உற்ற சேது காவலர் திறல் குடி
பிறந்தோன்-நிமிரா நிற்குந் திரைகள் முரிந்து விழுகின்ற கன்னியாகுமரிப்
பக்கத்துள்ள சேதுவைக் காத்தற்றொழிலில் வல்லாருடைய திறலான குடியிற்
பிறந்தவனும்,
தீது
தீர் வாழ்க்கை தென் புலம் காப்போன்-குற்றந்தீர்ந்த
வாழ்க்கையினையுடைய தெற்கின் கண்ணதாகிய நிலத்தைக் காப்பவனும்,
தென்புலம்-தக்கணம்.
மறம்
காண் பகைவர் வணங்கிய-மறத்தைக்கண்ட பகைவர் வணங்க,
வணங்கிய-வினையெச்சம்.
புறம்
காண் மஞ்சு வரும் ஏறு இன் அஞ்சு வரு திறலினன்-
அப்பகைவரின் முதுகைக் காண்கிற மேகத்தினின்று வருகிற இடியையொத்த
காண்பார்க் கச்சம் வருதற்குக் காரணமான திறலையுடையவனும்,
|