|
பணை
இருகோடு இன் இணை எருது பிணித்த பாண்டில் உம்-பருத்த
இரு கொம்புகளையுடைய இரட்டை எருதுகளைக் கட்டின வண்டில்களும்,
சிவிகை
உம்-பல்லக்குக்களும்,
சிறுகண்
யானை உம்-சிறிய கண்களையுடைய யானைகளும்,
கூண்டு
இனிது ஒழுகும் குறை இல் மறுகு தொறும்-கூடி இனிதா
யொழுங்குபடச் செல்கின்ற குறைபாடில்லாத தெருக்கடோறும்,
கூடம்
போன்ற கோபுரம் நிரை ஒடு மாடம் சான்ற மதுரைமா நகர்
கண்-மலைச்சிகரத்தைப் போன்ற கோபுரங்களின் வரிசைகளோடே
மாடங்களம் மிக்க மதுரை என்னும் பெரிய பட்டணத்தின்கண்,
மூதூருங்
குடியிருப்புமாகிய மதுரை யென்க.
பிந்திய
சங்கம் முந்திய சங்கம் மூன்று ஒன்று ஆகி பிறந்தது ஆல்
என-பிந்தினவிச்சங்கம் முந்தின சங்கங்கண் மூன்று மொன்றாய்ப்
பிறந்ததென்னும்படி,
மூன்று
மென்னு மும்மை தொக்கது. ஆல்-அசை,
தண்
தமிழ் தெரிக்கும் பண்டைநூல் எழும்ப-தண்ணிய தமிழைத்
தெரிவிக்கின்ற பழைய நூல்களெல்லாந் தலையெடுக்கவும்,
இயல்
நனி விழைகுநர் குழஇனர் பயில-இலக்கணத்தை மிக
விரும்புவோர் சென்று கூடியிருந்து கற்கவும்,
குழீஇன
ரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.
மால்
செய் கல்வியர் மாண்பு இன் நூல் செய-பெருமையைச் செய்யுங்
கல்வியுடையார் மாட்சிமையினையுடைய பல நூல்களைச் செய்யவும்,
உரை
காண் வல்லுநர் வரை காண்டு எழுத-நூல்கட் குரைகாணும்
வல்லார் அவ்வந்நூலினளவைக் கண்டு உரை எழுதவும்,
|