பக்கம் எண் :

24 புலவராற்றுப்படை

ஏ-பிரிநிலை. பயில்வுழி-வகரம் தோன்றல் விகாரம்.

     நன்று உறு தமிழ் வளம் குன்றுதல் கண்டு-நன்மை பொருந்திய
தமிழின் வளம் குன்றுதலைக் கண்டு,

     அது பண்டை இல் சிறந்து தழைப்ப கொண்டு-அத்தமிழ் பண்டு
போலச் சிறந்து தழைத்தற்காக மனங் கொண்டு,

     பண்டை யென்றது சங்கத்தார் காலத்தை,

     வான் அமர் அதனை யான் வளர்ப்பல் என-சிறப்புத் தங்குமத்தமிழை
யான் வளர்ப்பேனென்று சொல்லி,

     அஞ்சிறை தும்பி துஞ்சி ஊத-அகத்தின்கட் சிறகினையுடைய
வண்டுகள் தங்கியூதலால்,

     பிணி அவிழ்பு அலர்ந்து காம்பு கழல்அணி மலர்-முறுக் கவிழ்ந்து
விரிந்து சினையினின்று காம்பு கழன்ற அழகிய பூக்கள்,

     வன்னம் கம்பலம் விரித்து ஆங்கு அன்ன தரை படர்ந்து இமைக்கும்
விரைகெழு பூபொழில்-சித்திரகம்பலத்தை விரித்தாற்போலத் தரையிற்
படர்ந்து விளங்கும் வாசனைமிக்க அழகிய சோலைகள்,

     இரு மருங்கு ஒழுகிய-இரண்டு பக்கத்து மொழுங்குபட வளர்ந்து,
உம்மை தொக்கது.

     கரை பொரு வையை செந்தமிழ் நாடு திரு தகு முது ஊர்-கரையைப்
பொருதுகின்ற வையையாற்றினையுடைய பாண்டிநாட்டின் கண்ணுள்ள
செல்வந் தக்கிருக்கும் பழையவூர்,

     “சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்-சவுந்தர பாண்டிய னெனுந்
தமிழ் நாடனுஞ் சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கு, மங்கலப் பாண்டி
வளநா டென்ப” என்பவாகலின், செந்தமிழ் நாட்டைப் பாண்டி நாடென்றாம்.

     பைந்தமிழ் வளர்த்த பாண்டியர் இருக்கை-பசிய தமிழை முற்காலத்து
வளரச்செய்த பாண்டியர்களின் குடியிருப்பு,

     நடை மாண் புரவி உம்-நடையான் மாட்சிமைப்பட்ட குதிரைகளும்,

     மான் தொடை தேர் உம்-குதிரை தொடுத்தலையுடைய தேர்களும்,