|
இவரென்பதனைக் கற்றவரினுங்கூட்டுக.
வகையிற்றென்னும் வினைக் குறிப்பு
இனி வரும் காலத்தென்பதனோடு முடிந்தது. இன்றென்பதனை
அசைநிலையாக்கி, வகையாகியெனக் கோடலுமொன்று.
கண்
இல் மாக்கள் முன்னர் எண்பட-பார்வையில்லாத மனிதர்முன்னே
இரண்டு மொன்றேயென் றெண்ணிக்கைப்பட,
பார்வையைக்
கண்ணென்றாம்; அஃது ஆகுபெயர். கிளந்த வல்ல
என்பது தொல்காப்பியம். ஈண்டுப் பார்வையென்றது இரத்தின பரிக்கை
காண்டலை.
இயல்
மணி நிரை இல் செயல் மணி விராஅய் கிடந்து இமைத்து
ஆங்கு-இயற்கைரத்தின நிரையிற் செயற்கைரத்தினங் கலந்து கிடந்து
பிரகாசித்தாற்போல,
இயன்மணி-சாதிரத்தினம்.
செயன்மணி-காய்ச்சுகல்.
மடம்
திகழ்பவர் முன் இருவரும் தகைமை இன் ஒருவர் என
கலாவி-மடமை விளங்குவோர் முன்னே அக்கற்றார் கல்லாரென்னம்
இருவரும் தகுதிக்கண் ஒருதன்மையரே யென்று சொல்லும்படி கலந்து,
அறியார்
என்னா பெரும் சுட்டு உறீஇ-இவர்கள் அறியாதாரென்று
சொல்லப்படாமற் பெரிதுஞ் சுட்டப்படுதலைப் பொருந்தி,
போலி
புலமையர் திரியும் இக்காலத்து-போலிப்புலவர்கள் திரியாநிற்கு
மிந்தக்காலத்தில்,
புனை
நூல் உணரா அனையர் ஆன் உம்-அலங்கரிக்கப்பட்ட
நூல்களைக் கற்றுணராத அத்தன்மையராலும்,
நறவு
ஓர் வாழ்க்கை பறவை இன் விழைஇ அரும் கலை பல உம்
ஒருங்கு உடன் துரீஇ நன்மை இல் பயிலுநர் இன்மை ஆன் உம்-தேனைத்
தேர்ந்து வாழ்தலையுடைய வண்டுபோல விரும்பி அரிய கலைகள்
பலவற்றையு மொருங்கடையத் தேடி நன்மையிலே கற்போரில்லாமையாலும்,
பயிலுநர்
சிலர் ஏ ஆகி பயில் உழி புரத்தல் மாலையர் கரத்தல் ஆன்
உம்-அங்ஙனங் கற்பார் சிலரேயாய்க் கற்குமிடத்துக் கற்பாரைக் காக்கு
மியல்பினையுடையார் காவாதொளித்தலானும்,
|