பக்கம் எண் :

101

 கைகேசியும் பிள்ளையும் கூனியும்
  கட்டாந்தரை அட்டையைப் போல் மண்ணைக்
  கட்டிக் கொண்டினிப் புரளட்டும் எனக்குடி கலைந்தார் சிலபேர்கள்

7. சானகி எனும் லட்சுமி போனபின்
     மாநகரத்தில் ஆர் இருப்பார் அவள்
     தமக்கை யல்லவோ இருப்பாள் எனத்தவி தவித்தார் சிலபேர்கள்

  கானகம் புகுவது முன்னே தசரதன்
     வானகம் புகுவது நிலைவரம் பென்று
      கரை காணாக் கப்பலோர் போலவே பரிவார் சிலபேர்கள்

8. சத்திய ராமனை வரச் சொல்லி
     மற்றொரு வருக்கு முடி கொடுத்தான் இந்த
      தசரதன் மெத்த நல்லவனோ என்று  தளர்ந்தார் சிலபேர்கள்

  எத்தனை பேர் சந்தைக்கு வந்தாலும்
     எல்லோரும் துணை ஆவாரோ ராமனுக்கு
   இளையவனோ துணை இந்த ஊரில் என்று இடிந்தார் சிலபேர்கள்

9. மணிமுடி வரச் சொல்லிய முகுர்த்தத்தில்
   சடைமுடி வரச் சொன்னானே இந்த
    வசிஷ்டனைபோல விசிஷ்டன் உண்டோ என்று வைதார் சிலபேர்கள்
 
   துணியுமோ மனம் அடடா உண்கிற
    சோற்றிலே நஞ்சு கலந்தார் போலவே
       தொடுத்தாள் பழிகொடுத்தாள் கைகை என்று சொன்னார் சிலபேர்கள்

10. பாவமும் வரும் பழியும் மிகவரும்
     தீபமில்லா மனைபோலே இந்தப்
     பட்டணம் பறிபோமே என்றுமண் படிந்தார் சிலபேர்கள்

  தாவரம் இல்லா இளங்கொடி போலவும்
     பாய்மரம் இல்லா மரக்கலம் போலவும்
      தாமரை இலைத் தண்ணீர் போலவும்  தவித்தார் சிலபேர்கள்