102 சுமந்திரன் புலம்பல் விருத்தம்-17 மாநகர்இப் படிபுலம்பத் தேர்மேற் கொண்டு வழியில்ஒரு சோலையிற்போய் பாதிச்சாமம் ஆனதிது வந்தவரோ உறங்கி விட்டார் அயோத்தியிலே அவர்போக வேணும் தேரைத் தானுருவ வடதிசையில் விட்டால் என்னைத் தான்மீண்டான் எனப்பலரும் அங்கே மீள்வார் ஏனித்தா மதமென்று ராமன் சொல்லி எழுகென்றான் சுமந்திரன்நொந் தெழுகின் றானே திபதை-7 நீலாம்பரிராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. செகம் மகிழும் ராமச் சந்திரன்-போகாமல் தேரைத் திருப்பு வான் அல்லோ சுமந்திரன்-என்தன் மகன் வருவானென் றிருப்பானே-ராசனுக்கெந்த வாய்கொண்டுசொல்ல இருப்பேனே 2. ஊரில் என்னைக் கண்டபேர் சொல்ல-தசரதனுக் கோர் உடம்பீர் உடம்பாம் அல்லோ-உன்பிள்ளைகளை தேரிறக்கி விட்டேன்என் பேனோ-முகமறி யாத் தேசத்திலே விட்டேன்என் பேனோ 3. மக்களைவிட் டோடிவந் தானே-என்றஉடன் மன்னவனும் உயிர்நைந் தானே-இப்போது நான் தெற்கிலே நின்றல்லோ போகுவேன்-எமன்விடுத்த சேவகன் போலல்லோ ஆகுவென் 4. இன்னம் உன்னைக் கூவிக் கூவி-தசரதனுக் கிருக்குமேநல்லுயிர் மேவி-நானிந்த வார்த்தை சொன்னவுடன் போமே ஆவி-இந்தப்பழியை சுமக்கவோ நான்வந்தேன் பாவி ----- |