பக்கம் எண் :

103

ஸ்ரீ  ராமர் சுமந்திரனுக்கு நீதி ஓதுதல்

விருத்தம்-18

மந்திரி சுமந்திரன் இந்த வண்ணமே கூற ராமச்
சந்திரன் அவனை நோக்கிச் சகலமும் தெரிந்த நீரே
எந்தன்தாய் சொன்ன வார்த்தைக் கிரண்டுதான் செய்ய லாமோ
சிந்தைஏன் இனிமே லென்று தெளிவிப்பான் தெரிவிப் பானே

தரு-10

பைரவி ராகம்                        அடதாள சாப்பு

பல்லவி

     சொல்லும் சொல்லும்-சுமந்திரரே
    நில்லும் நில்லும்                     (சொல்) 

அநுபல்லவி

     நல்ல ராத்திரி இதுபோல் இல்லை       காணும்
          நகர் உள்ளோர்களும் நீரும் போக வேணும்
     அல்ல நீர் வேறே சொன்னால்              விரும்புமோ
          அணைகடந்த வெள்ளம் அழைத்தால் திரும்புமோ (சொல்) 

சரணங்கள்

1. வீரம் பேசிக் கொண்டெழுந்த சேவகன்
     வெட்டுங் களம் கண்டு முதுகை    இடம் ஆமோ
  ஆருங் காணவே தவசுக் கென்று வத்து    
     அதுக்கெல்லாம் பயந்தச்சப்       படல் ஆமோ
  வாருங்காணும் பெற்றதாய் சொல் விரதத்தை
     மறந்து பின்னை ஒரு விரதத்தைத்  தொடல் ஆமோ
  சூரிய குலத்திலே பிறந்து முந்தி முந்தி
     தொடுத்த காரியத்தை நடுவே      விடல் ஆமோ (சொல்)

2. மன்னன் பரதற்கு நான் இருக்கிறேன்
     வருகிறேன் இளக்கரிப்ப          தேன் என்றும்
  பின்னும் அறிந்தறி யாததுக்கும் மன்னன்
     பெரிய உதவியே உதவி          தான் என்றும்