104 என் இடத்தில் வைத்த அன்பு போல் கைகை இடத்தில் வைக்கா விட்டால் வனம்போ றேன் என்றும் அன்னைமார்க்கும் மன்னனுக்கும் பதினாலும் ஆண்டும் போய்வந்து வணங்கு வேன் என்றும் (சொல்) 3. உலகிலே ஒருநன்மை செய்ய இடை யூறுமெத்தவரும் ஆகை யால் அதை நிலையி தென்னலாமோ காலம் போம் வார்த்தை நிற்குமே பின்னை வேறே உண் டோவதை பலரும் தவிக்கிறார் என்று தாய்மொழி பழிக்கவோ நான் வந்தேன் என்ன கதை மலை விழுந்தாலும் தலையே தாங்க வேணும் மலைத்த வர்க்குப்பலன் பலிக்கு மோஇதை ----- ஸ்ரீ ராமரை நினைந்து சக்கிரவர்த்தி புலம்பல் விருத்தம்-19 வீரன்எனும் ராமனுரை சுமந்திரன் கொண்டான் மீண்டதோர் வழிபலரும் மீண்டார் சேதி ஊரதிலே வசிஷ்டமுனி உடன்போய்ச் சீவன் உண்டிலைஎன் றிடும்வேந்த னுடனே சொன்னான் கூரெரியி லேவிழுந்த வெண்ணெய் போலும் கொதித்திடும்கொப் பரையில்விழும் புழுவைப் போலும் சீருளதன் மகனைநினைந் தேங்கிச் சிந்தை சிதறினான் தசரதனும் கதறினானே திபதை-8 கண்டாராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. சின்னஞ்சிறு தாமரைபோல் பொன்னான பாதங்கள் நோவத் தேடிவனம் ஓடிவிட்டாய் ரகுராமா-ராமா என்னை இந்தவேளை நடுத்தண்ணீரில் கைவிட்டாற்போலே எப்படித் துணிந்துவிட்டாய் ரகுராமா-ராமா |