பக்கம் எண் :

105

2. முடிக்குமகுடஞ்சூட்டி முகம்பார்க்க இருந்தேனே
     மோசம் கைகேசி செய்தாள்            ரகுராமா-ராமா
  உடுத்த புடவைதரினே பாம்பாய்க் கடிக்குமென்னும்
     உளவறியாமற் போனேன்              ரகுராமா-ராமா

3. மாலையிட்ட கைகேசிதான் காலனைப் போலே வந்தென்
     வாணாளைக் கொண்டாள் அய்யோ     ரகுராமா-ராமா
  வேலிக்கு முள்ளிடவேஎன் காலுக்குமுள் ஆகவந்து
     விளைந்ததென் விதிவசம்              ரகுராமா-ராமா

4. ஆனைமேல் பவனியாக அபிஷேக முடிசூடும்
     அலங்காரம் என்று காண்பேன்         ரகுராமா-ராமா
  நானொன்று நினைக்கத்தெய்வம் தானொன்று நினைத்ததையோ
     நான்செய்த பாவம் ஈதோ             ரகுராமா-ராமா

5. தாயும்நீ தந்தையும்நீ சற்புத்திர மாணிக்கமும்நீ
     சகல பாக்கிய மும்நீயே               ரகுராமா-ராமா
  நீயில்ல நாடிதெல்லாம் நிலவில்லா முற்றம்போலே
     நெடும்பாழ் அடைந்த தையோ         ரகுராமா-ராமா

6. படித்துப் படித்துச் சொல்லிக் காலும் பிடித்துக்கொண்டேன்
     பாவிகை கேசி அய்யோ              ரகுராமா-ராமா
  அடிக்க அடிக்கப் பந்து விசை கொண்டெழுந்தாற்போல்
     ஆயுசுக்குலை வைத்தாளே            ரகுராமா-ராமா

7. குடைமகு டந்தரித்துக் குலவியம் தன்னையாளும்
     கோலங் காணும் முன்னாக            ரகுராமா-ராமா
  சடைமகுடந் தரித்துக் காட்டிலேபோ என்றேனே
     சண்டாளன் என்போல் உண்டோ       ரகுராமா-ராமா

8. தேறுதல் எங்குங் காணேன் திக்குந் திசையுங்காணேன்
     தெய்வமும் துணை காணேன்          ரகுராமா-ராமா
  ஆறுதல் எங்கும் காணேன் அந்தரத்தில் கோல்எறிந்த
     அந்தகன்போல் ஆனேன் அய்யோ     ரகுராமா-ராமா

9. பாரெல்லாம் பரதன்கொள்ள உன்னையுமென் கண்ணின்முன்னே
     பறிகாட்டில் போ என்றாளே           ரகுராமா-ராமா