பக்கம் எண் :

106

  கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே
     கெடுகாலி எங்கேவந்தாள்             ரகுராமா-ராமா

10. சேனைகாவலர்கூட நான்கூடமுடிசூட்டி
     சிங்காசனம் வைக்கும்முன்னே          ரகுராமா-ராமா
  ஆனைநிழலைப் பார்க்க தவளை கலங்கினாற்போல்
     ஆனாளே கூனி அய்யோ             ரகுராமா-ராமா

11. சற்றே பொறுத்துச் சென்றால் சகுனதோஷம் என்றோநான்
     சாவேன் என்றறிவாயோ               ரகுராமா-ராமா
  சுற்றும் அழுகைக்குரல் கேட்கிறத்துக்குமுன்னே
     சுருக்கா நடந்துவிட்டாய்               ரகுராமா-ராமா

12. குலத்தை விளக்கவந்த மகனே உனக்குப்பட்டம்
     கொடுத்து வாங்கிக் கொண்டது          ரகுராமா-ராமா
   கலத்திலே சோற்றையிட்டு கைப்பிடித்தாற்போலாச்சே
     காலம் இப்படி ஆமா                 ரகுராமா-ராமா

13. பாயும் அமுதமும்பொன் பள்ளயமும் இங்கிருக்க
     பறிகாட்டிலே நடந்து                 ரகுராமா-ராமா
  காயும் கிழங்கும் தின்னல் ஆச்சோ தெய்வத்துக்கும்
     கண்இல்லையோ மகனே              ரகுராமா-ராமா

14. வீசும்நெருப்பைப் போல கடுங்கோடையும் கானலும்
     வெய்யிலும் மேல் படுமே             ரகுராமா-ராமா
   காசாம் பூமேனியெல்லாம் வேர்வை முத்துமுத்தாகக்
     காண்பாளோ கௌசலை              ரகுராமா-ராமா

15. பூமேலே விழுந்தாலும் தழும்புபடுமே உன்தன்
     பொன் ஆனமேனி அய்யோ           ரகுராமா-ராமா
   மாமலையும் கொடியும் செடியும் பொடியும் தாக்க
     வழிநடந்தறிவாயோ                  ரகுராமா-ராமா

16. முடிக்கபிஷேகம் செய்துன் அடிக்கீழே ஓடுந்தண்ணீர்
     முந்திக்கொண் டாரானாலும்            ரகுராமா-ராமா
  பிடித்தொரு படிதந்தால் குடிக்கேனோ குடித்தென்தன்
     பெருந்தாகந் தணியேனோ             ரகுராமா-ராமா