பக்கம் எண் :

107

17. இழையாயிரம் பொன்பெற்ற பீதாம்பரம் உடுத்த
     இடைமீதிலே மகனே                 ரகுராமா-ராமா
   பழிகாரி தான்கொடுத்த மரஉரிதான் உடுக்கப்
     பார்த்தாரோ ஊர் உள்ளோர்கள்        ரகுராமா-ராமா

18. பார்த்தாலும் பசிபோமே பால்வடியுமே உன்தன்
     பவளவாய் முகந்தன்னை               ரகுராமா-ராமா
   காற்றோட்ட மாகவந்து சற்றே நீகாட்டி என்னைக்
     கரையேற்றி விட ஒண்ணாதோ          ரகுராமா-ராமா

19. பிள்ளைதன் தொடைமேலே பெற்றவன் சீவன்விட்டால்
     பெருங்கதி உண்டென்பாரே            ரகுராமா-ராமா
   கள்ளக்கை கேசிகையில் காட்டிக் கொடுத்துவிட்டு
     கடக்கப்போய் நிற்கல் ஆமோ          ரகுராமா-ராமா

20. கண்ணும் இருண்டதைய்யோ கருத்தும் அழிந்ததையோ
     கைகாலும் ஓய்ந்ததையோ             ராகுராமா-ராமா
   எண்ணம் குலைந்ததைய்யோ என்றுநான் காண்பேன் உன்தன்
     எழுதரு முகந்தன்னை                ராகுராமா-ராமா

------

ஸ்ரீராமரைக் குகன் தன் ஊரில் இருக்க வேண்டல்

விருத்தம்-20

புலம்பியமன் னன்இவ்வா றிடிந்து சீவன்
          போயினான் வைகுண்ட புரத்தைச் சேர்ந்தான்
     பெலந்தரும் மன்னவர் அவனை எடுத்தார் எண்ணெய்
          பெருந்தோணி யில்இட்டார், இப்பால் ராமன்
     நலந்தரும் லட்சுமணன் சீதையுடனே கங்கா
          நதியடைந்தான் முனிவரொடும் கலந்தான்அந்த
     சலந்தனையும் குகன்விடுத்த தோணியாலே
          தாண்டினான் அவனிருக்க வேண்டினானே

தரு-11

கலியாணி ராகம்                               ஆதிதாளம்

பல்லவி

     இங்கே இருங் காணும் - தரிசனம்தந்
     தென்னை ரட்சிக்க வேணும்           (இங்கே)