பக்கம் எண் :

108

அநுபல்லவி

     மங்கையாம் என்தாயும்      ராமா நீயும்-இந்த

     வரிசைத்தம்பியும் அய்ய     ஒருபத்தன்குகன் உய்ய (இங்கே)

சரணங்கள்

1. பூவுண்டு கனியுண்டு ஊன்உண்டு தேன்           உண்டு
     புதுமர உரிகளும் போர்வையும்               உண்டு
  தாழ்வுண்டு தடம்உண்டு கங்காநதி                உண்டு
   தான்வேண பட்சணம் உண்டு நானேசெய் ரட்சணம் உண்டு (இங்)

2. எட்டுத் திக்கிலும் செல்லுவேன் கிழங்குவகை கெல்லுவேன்
     எதிர்த்தவரை வெல்லுவேன் வழி       செல்லுவேன்
  கட்டிக்காத்து நானேகண் இமைபோலே      தானே
     காலாலே காட்டினதெல்லாம் கையாலே செய்கு வேனே (இங்)

3. நித்தியம் உம்மைப் பிரியேன் மற்றொன்றையும்    குறியேன்
     நிணறு மறக்கறியேன் நான்                 சிறியேன்
  முற்றிலும் நிறைதிங்கள் எனவே விளங்கும்        உங்கள்
     முகங்கண்டாற் பசிபோமே முத்திமோட்சம்     உண்டோமே (இங்)

-----

ஸ்ரீ ராமர் குகனைச் சினேகங் கொள்ளல்

விருத்தம்-21

தனது புகலும் குகனேசன் தம்பிஉனது தம்பிகண்டாய்
எனது துணைவன் நீகண்டாய் இச்சீதையும் உன்மதனி கண்டாய்
மனது பொருந்தத் தாய்சொன்ன வரத்தால் காட்டில் இருப்பதல்லால்
உனதுநாட்டில் இருப்பாமோ உரைப்பாய் இதையா தரிப்பாயே

திபதை-9

சங்கராபரண ராகம்                    அடதாள சாப்பு

கண்ணிகள்

1. காட்டில் இருக்கவந்து நாட்டுக் கருகான         
     நாட்டில் இருக்கலாமோ               குகனே
  பூட்டகமோ இது குளிக்கப்போயும் சேறு        
     பூசிக் கொள்ளல் ஆமோ              குகனே