பக்கம் எண் :

109

2. பதினாலு வருஷம்போய் நாமெல்லாம் ஒருமிக்க
     பதியில் இருக்கல் ஆமே              குகனே
  மதிமோ சமோஆனை ஏறியும்திட்டி
     வாசலில் நுழைவான் ஏன்             குகனே

3. உன்பரிசனம் என்னது உன்ஊரும் என்னதுஉன்  
     உறவும்என் உறவாச்சே               குகனே
  என்பிறகே நீவந்தால்இநத உறவைக்காக்க
     எவருண்டு நீசொல்லுவாய்             குகனே

4. பொறுத்த எனது தவம் முடிக்க வேணும் அந்தப்
     பொறுப்பு உனக்கில்லையோ           குகனே
  குறுக்கப் பேசாதேமுதல் கோணினால் முட்டக்
     கோணும் தடைசொல்லதே             குகனே

5. ராமன் பரதன்லட்சு மணன்சத்து ருக்கன் என
     நால்வர் பிறந்திருந்தோம்              குகனே
  ஆமுன் உடனே ஐந்து பேரானோம் சீரானோம்
     அதிக பலவான் ஆனோம்            குகனே

6. குருவியின் தலைமேலே பனங்காய்ப்போற் புவியாளக்
     குழந்தை பரதனடா                  குகனே
  அருகில் இருக்கிறாயே நான்இருக்கிறாப் போலே
     அடிக்கடி பார்த்துக் கொள்வாய்         குகனே

7. உடன்ஆன தம்பியிவன் உனது மதனி இவள்
     உனது துணைவன் நானே             குகனே
  இடர்ஏன் படுகிறாய் நான்என்றும் நீஎன்றும்
     இரண்டாக எண்ணாதே               குகனே

8. சற்றே காணும்முன்னே கங்கைக் கரைஏற்றிஎன்
     தலையும் கரைஏற்றின                குகனே
  சித்திர கூடத்துக்கு வழியெங்கே நீஇங்கே
     திரும்ப ஒன்றும் பேசாதே             குகனே

-----