பக்கம் எண் :

110

ஸ்ரீராமர் சீதைக்குச் சித்திரகூட வளங்காட்டல்

விருத்தம்-22 

     வரதன்என்னும் ரகுராமன் குகனை இந்த
          வகைத் தேற்றி பரத்துவாசக்
     குரவன் அனுமதியாலே தம்பியும்
          சீதையும் தானும் கூடிப்போனான்
     பரமுள சித்திர கூடமலை சேர்ந்தான்
          முகமலர்ந்து பார்த்தான் அங்கே
     கரதலத்தைச் சீதைமுன்னே நீட்டுவான்
          மலைவளங்கள் காட்டுவானே.

தரு-12

முகாரி ராகம்                        அடதாள சாப்பு

பல்லவி

     பாராய் பெண்ணே பாராய் பெண்ணே
     பாக்கிய சனகன் கண்ணே             (பாரா)

அநுபல்லவி

     சீராக நமக்குநேர் ஆகிறஇந்த
     சித்திர கூடமலை ரத்தின பீடம்போலே  (பாரா)

சரணங்கள்

1. மாதவர் முனிவர்சொல் வேதங்களைக்கிளி
     வாடிக்கை யாற்கற்று வனமெங்கும்       படிப்பதும்
  கோதும்தினைக் கொல்லையினிற் பம்பைகள்
     எடுத்துக் குரங்குகள்                  அடிப்பதும்
  ஆதவன் குதிரையைப் போல் பசும்பாறை ஒளிபாய்ந்த
     ஆடுகள் பசுமையாய கோடேறி         நடிப்பதும்
  பேதகம் இல்லாமல் மேல்ஓடம் மேகத்தைப்
     பெண்யானை எனக்கையால் ஆண்யானை பிடிப்பதும் (பா)

2. மூலமுனிவர்க்குமலை ஏறப் படிபோலே
     முடங்கி அடங்கிக்கொண்டு மலைநாகம்  கிடப்பதும்
  காலில் அழுந்தாமல் புல்எல்லாம் கொம்பாலே
     கரும் பன்றிகள்                     இடப்பதும்