111 கோலஅயோத்தியில் இட்டகொடி போலே கோல்மூங்கிலிற் பாம்புத் தோல்பட படப்பதும் வாலைப் பிடிகொடுத்துக் குறுகுங்கண் முனிவர்க்கு மந்திகள் அங்கங்கே வழிகாட்டி நடப்பதும் (பா) 3. அருவி நீரை மொண்டு துதிக்கையா லானைகள் அருந்தவர் பெருங்கமண்டலந் தனில் விடுப்பதும் குருவிகள் தினைக்கதிர் மூக்கினால் மடத்திற் கொண்டு போய்க் கொடுப்பதும் பரவும் ஓமக்குண்டத்தெரி வளர்ந்திட மயில் பசுமையாம் சிறகை விசிறிபோல் எடுப்பதும் திருமா முனிவர்முப் புரிநூல் அணிவதற்குச் சிலந்திநூல் கொண்டுபோய்க் குரங்குகள் கொடுப்பதும்(பா) ----- சக்கிரவர்த்தியைக் குறித்துப் பரதர் புலம்புதல் விருத்தம்-23 துய்யமலை வளங்களைஇவ் வாறு காட்டித் தோகையுடன் சாமிலட்சுமணன் தான்செய்த செய்யபர்ண சாலையினில் இருந்தான்இப்பால் செயமுளகே கயநாட்டில் வதிஷ்டன் ஓலை பையஅறிந் துடன்மீண்டான் தாய்கை கேசி பதத்தினிற்சத் துருக்கனுடன் பரதன் வீழ்ந்தான் அய்யன்எனும் தசரதன்சீர் அறிந்தான் தேம்பி அழுகின்றான் அழுதழுது விழுகின் றானே திபதை-10 மத்தியமாவதி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. அரசே எனதய்யனே எனதப்பனே எங்கே நடந்தாய் உரைசேரும் விண்ணவரோ டேநீஉற வாடவோ தொடர்ந்தாய் 2. முறையும் உன்தன் நிறையும் எக்கிய துறையும்எல்லாம் தானே பிறகே கொண்டுபோன தென் குறையோ அறி யேனே |