112 3.சத்தியமும் சுபகீர்த்தியமும் நித்தியமும் நித்தியம் அல்லோ சிறந்தாய் மித்திரனை தர்மபுத்திரனை ராமபத்திரனை எங்கே மறந்தாய் 4. அழகா உன்னைத் தொழ ஆசைகொண்ட டுத்தேன்இது பொய்யோ எமுதாப் பொறிக் கழுதால் இதில் என்னதான் வரும் அய்யோ 5. சீலராகவன் மேலேமாமுடி கோலிநீ வைக்கும் முன்னே காலம் செய்திடும் கோலம்தன்னைஎன்னால் என்னசெய்யல்ஆம்மன்னே 6. அம்பரந்தனில் சம்பராசுரன் துன்ப மேசெய்கி றானே உன்பிராணனை ராமன்மேல் வைத்தஅன் பெலாம்இது தானோ 7. அய்யன்முனி வசிஷ்டன் விட்டகை ஓலையின் பேச்சே மெய் யென்றிருந்தேனே நான்விழித்தேன் கன வாச்சே 8. எண்ணினால் என்ன அண்ணன்ராமன் இருக்கின்றானே நேரம் புண்ணிய வானை என்கண்ணிற் காணவே போமேஎன்வி சாரம் ----- பரதர் கைகேசியைக் கோபித்தல் விருத்தம்-24 வருதுயரம் ஒருவிதத்தால் பரதன் தேறி மன்னன்இறந் தாலுமென்ன அண்ணன் ராமன் திருமுகங்கண் டாற்போதும் எங்கே என்றான் தேசமெல்லாம் ஒருவரத்தால் உனக்கே சொன்னேன் ஒருவரத்தால் அவனைவனம் போகச் சொன்னேன் உள்ளபடி இதுமகனே பிள்ளை நீங்கப் பெரியமன்னன் இறந்தான்என் றுரைத்தாள் கண்ணீர் பெருகினான் கைகையைநொந் துருகி னானே தரு-13 கமாசுராகம் அடதாளசாப்பு பல்லவி என்னடீ பாவிகைகேசி - என்னடி செய்தாய்நீ என்னடீ பாவி கைகேசி என்னடி செய்தாய் (என்) |