பக்கம் எண் :

113

சரணங்கள்

1. மன்னவனைக் கொன்று அண்ணன் வனம்போக விடுத்தாய்இன்னம்
  இன்னம் உண்டோபாவி என்னை ஏண்டி         கெடுத்தாய் (எ)

2. என்று பாவியுன் வயிற்றினில்        வந்தேனே-நான்
  அன்றுதாயே அன்று பேய்என்று     நொந்தேனே (எ)

3. அய்யன் ராமன் காய்கிழங்கு கிண்டல் ஆமோடீ-நாம்
  நெய்யும் பாலும் சோறும் வாரிமண்டல் ஆமோடீ (எ)

4. உன்னைக்கொன்று என்பழியைப் பின்னே தீர்க்கிறேன்-எங்கள்
  மன்னவன் ராமன் வைவான் என்றெண்ணிப் பார்க்கிறேன் (எ)

5. தின்றால்அல்லோ நஞ்சுகொல்லும் என்பது பொய்யோ-நான்
  ஒன்றும் அறியேன் இதுக்கென்ன செய்வேன் அய்யோ (எ)

6. மன்னவன் பின்னோடே நீபோகல்லோ  வேணும்-இனி
  என்னையும் கொன்றாகிலும் நீசாகல்லோ வேணும் (எ)

7. தரமோ நான்புவி ஆளத்தரமோ      கண்டாய்-ரண்டு
  வரமோ கழுத்தறுக்க அரமோ        கொண்டாய் (எ)

8. நாயகன் ராமனுக் கிணை சொல்லப்   போமோடீ-ஓர்
  ஆயிரம் நட்சத்திரம் ஒருசந்திரன்     ஆமோடீ (என்)

------

பரதர்  கோசலாதேவிக்குச் சத்தியங் கூறுதல்

விருத்தம்-25

    கோவித்த பரதனந்த கைகை விட்டப்புறம் கோ
          சலையைக் கண்டான்
    சேவித்தான் கைகை செய்த தறிந்திலையோ
          என்றந்தத் தேவி கேட்டாள்
   ஆவிக்கும்ஆவி அண்ணன் ராமனை வஞ்சித்
          தறியேன் அறிந்தோனகில்
   பாவிக்கும் பாவியாய் விடுவன்என்று
          சத்தியங்கள் பண்ணுவானே.