114 தரு-14 சாவேரி ராகம் அடதாளசாப்பு பல்லவி சேருங் கதியில் சேருவேன்அம்மா - இந்த ராமத்துரோகம் தெரிந்தால் அனுபவிக்கிறேன் அம்மா (சேரு) அநுபல்லவி தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி திரும்பத் திரும்ப என்னகண் காட்சி ஓரிபோற் பெரியோரை வைதவன் உண்டவீட்டுக்கு ரண்டகம் செய்தவன் (சேரு) 1. அய்யம்இட்டு உண்ணாதவன் குடிகெடுத்தவன்அப வாதகன் அகத்தில் ஒன்றும்புறத்தில் ஒன்றும்செய்யும் துர்க்குண போதகன் செய்தநன்றி விடுத்தவன் தீங்கெடுத்தவன் பிர்ம்ம காதகன் செய்யும் அவரைக்குறுக்கே தடைசெய்தவன் கொலை பாதகன் ஐயம் தீர்த்து நெஞ்சை உறந்தவன் அசல் உடைமைக்குப் பேயாய்ப் பறந்தவன் கையடித்துக் கொண்டு ஆணை மறந்தவன் கன்றுக்குப் பாலை விடாமற் கறந்தவன் (சேரு) 2. தீர்த்தக்கரை பாவியும் கடுங்கோவியும் செனத்து ரோகியும் செபதப விரதஈனனும் பரஸ்திரீசென அனு போகியும் பூர்த்தியாம் மதுபாணியும் அக்கியானியும் அவி வேகியும் பூமிக்குச்சுமை யாகவந்தபுகழ் இல்லாத தேகியும் வார்த்தையாற் பிரட்டும் படு கோளனும் வழக்கழிவு சொல்லும்அசட் டாளனும் தூர்த்த விர்த்திவிடா மிண் டாளனும் சோற்றிலே நஞ்சிடும் சண் டாளனும் 3, ஆறுகுளத்தில் உடையில்லாமல் அம்மணத்துடன் நடந்தவன் அன்னைவார்த்தை தந்தைவார்த்தை குருவின்வார்த்தை கடந்தவன் தேறும்நல் லோர் பெரியோரைக்கண் டெழுந்திராமற் கிடந்தவன் திருடனுக் கிடங்கொடுத்தவன் இடங்கொடுத்தவன்பின்னே-தொடர்ந்தவன் |