பக்கம் எண் :

115

வேறில்லாரைப் பகைத்து          விண்டவன்
     வேட்டகந்தன்னிலே இருந்   துண்டவன்
சீறும் படையைப் பயந்து          கண்டவன்
     செடியிலே தலைதுறுத்துக்    கொண்டவன்    (சேரும்)

-----

குகன் பரதர் சேனையைக் கண்டு கோபித்தல்

விருத்தம்-26

     சத்தியஞ்செய் துடனேசத் துருக்கனோடே
          தசரதன்செய் கடன்முடித்து நானே ராம
     பத்திரனை அழைப்பேன்என் றெழுந்தூராரும்
          படைகளுந்தா யாரும்வதிஷ்ட முனியும்சூழச்
     சுற்றுசடா முடிமுடிந்துப் பரதன் கங்கைத்
          துறைக்குவட கரைக்குவந்தான் வரக்கண்டாங்கே
     இத்திசையில் ராமன்மேற் பகைகொண்டன்றோ
          ஏறினான் என்று குகன் சீறினானே

தரு-15

காபி ராகம்                              அடதாள சாப்பு

பல்லவி

     என்னத்துக்குப் பரதன் படைவந்தது-என்
     திராணி பாருங்கள் வேடரே                (என்ன)

அநுபல்லவி

     மன்னவனுக் கடிமை நானென்று தெரியாமல்
     வனத்தில் வந்தும் துரத்திப் பிடிக்க வந்தாரோ  (என்ன)

சரணங்கள்

1.    ஆழநெடுந்திரைக்கை ஆறுகடந்தாலும் என்ன
     தோழன் என்று ராமன் என்னைச் சொல்லியருளியதொரு
          சொல் லேனோ      சொன்னபடிக்கு
          நில்லே னோ        நான்பிடித்தகை
          வில்லே னோ       இவரைக்
          கொல்லேனோ                      (என்ன)