பக்கம் எண் :

382

புடையொடு விடுகனலின்காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார்
தொடையொடு முதுகு துணிந்தார் கழிபடுகுருதி சொரிந்தார்
படையிடை ஒடியநெடுந்தோள் பறிதரவயிறு திறந்தார்
இடையிடை மலையின் விழுந்தார் இகல்பொரமுடுகி எழுந்தார்

புதைபடஇருளின் மிடைந்தார் பொடியிடை நெடிதுபுரண்டார்
விதைபடும்உயிரர் விழுந்தார் விளியொடு விழியும் இழந்தார்
கதையொடும் முதிரமலைந்தார் கணையொழி சிலையர் கலந்தார்
உதைபட உரனும்நெரிந்தார் உயிரொடு குருதிஉமிழ்ந்தார்

அயலயல் மறையொடறைந்தான் அடுபகை அளகை அடைந்தார்
வியலிடம் மறையவிரிந்தார் மிசையுல கடைய மிடைந்தார்
புயல்தொடு கடலின் விழுந்தார் புபைுடை சிதைவொடு சென்றார்
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகுதுறந்தார்

எடுத்த அரக்கரை எறிதலும் அவரஉடல் எற்றக்
கொடித் திண்மாளிகை இடிந்தன மண்டபம்குலைந்த
தடக்கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த
பிடிக்குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய

தத்தம் மாடங்கள் தம்உடலால் சிலர் தகர்த்தார்
தத்தம் மாதரைத் தம்கழலாற் சிலசமைத்தார்
தத்தம் மாக்களைத்தம் படையால் சிலர்தடிந்தார்
எற்றி மாருதி தடக்கைகளால் விசைத்தெறிய

வந்தகிங்கரர் ஏயெனும் மாத்திரை மடிந்தார்
நந்த வானத்து நாயகர்ஓடினர் நடுங்கிப்
பிந்து காலினர் கையினர் பெரும்பயம் பிடரின்
உந்த ஆயிரம் பிணக்குவைமேல் விழுந்துளைவார்
    (கிங்கரர்வதைப்படலம் 11, 23, 26, 27, 28, 29, 41, 42, 55)

சம்புமாலி வதை

விருத்தம்-18-தரு-15

கூம்பின கையன்நின்ற குன்றெனக் குவவுத் திண்தோள்
பாம்பிவர் தறுகண்சம்புமாலி என்பவனைப் பாரா