பக்கம் எண் :

381

ஏனைத்தார் அணி தேரொடும் இற்றன
கானத் தார்தரு அண்ணல் கடாவவே

பெரியமா மரமும் பெருங் குன்றமும்
விரியவீசலின் மின்னெடும் பொன்மதில்
நெரிய மாடம் நெருப்பெழ நீறெழ
இரியல் போன இலங்கையும் எங்கணும்

என்றனர் அரக்கிமார்கள் வயிறலைத்து இரியல்போகி
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலையப் போனார்
நின்றதோர் சயித்தங்கண்டான் நீக்குவல் இதனை என்னா
தன்தடக் கைகள் நீட்டிப்பற்றினன் தாதைஒப்பான்

விட்டனன் இலங்கைதன்மேல் விண்ணுற விரிந்தமாடம்
பட்டன கொடிகளான பகுத்தன பாங்குநின்ற
சுட்டன பொறிகள்வீழத் துளங்கினர் அரக்கர்தாமும்
கெட்டனர் வீரர்அம்மா பிழைப்பரோ கேடுசூழ்ந்தார்

சொல்லிட எளியதன்றால் சோலையைக் காலின்கையின்
புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப் பொன்னால்
வில்லிடு வேரம்தன்னை வேரொடு வாங்கிவீச
சில்லிடம் ஒழியத் தெய்வ இலங்கையும் சிதைந்த தென்றார்
  (பொழிலிறுத்தபடலம் 2, 8, 9, 10, 12, 16, 19, 25-27, 37, 39, 49,
                                               54, 57)

பனியுறு செயலைசிந்தி வேரமும் பறித்ததம்மா
தனியொரு குரங்குபோலாம் நன்றுநம் தருக்கு என்கின்றார்
இனியொரு பழிமற்றுண்டோ இதனின் என்று இரைத்துப்பொங்கி
முனிவுறு மனத்தின்தாவி முந்துற முடுகுகின்றார்

மழைகளும் மறிகடலும்போய் மதமற முரசும் அறைந்தார்
முழைகளின் இதழ்கள் திறந்தார் முன்புகை கதுவ முனிந்தார்
பிழையில படஅரவின் தோள்பிடர்உற அடியிடுகின்றார்
கழைதொடர் வனம்ஏரியுண்டா லெனஎறி படைநர் கலந்தார்

பறைபுரை விழிகள் பறிந்தார் படியிடை நெடிது படிந்தார்
பிறைபுரை எயிறும் இழந்தார் பிடரொடுதலைகள் பிளந்தார்
குறையுயிர் சிதறநெரிந்தார் குடரொடு குருதி குழைந்தார்
முறைமுறை படைகள் எறிந்தார் முடையுடல் மறிய முறிந்தார்