380 வேரொடு மறிந்தசில வெந்தசில விண்ணில் காரொடு செறிந்தசில காலினொடு வேலைத் தூரொடு பறிந்தசில தும்பியொடு வானோர் ஊரொடு மலைந்தசில உக்கசில நெக்க அலைந்தன கடல்திரை அரக்கர் அகல் மாடம் குலைந்துக இடிந்தன குலக்கிரி ளோடு மலைந்துபொடி யுற்றன மயங்கி நெடுவானத்து உலைந்துவிழும் மீனினொடு வெண்மலர் உதிர்ந்த புள்ளினொடு வண்டும் ஞிமிறும் கடிகொள்பூவும் கள்ளும் முகையும் தளிர்களோடு இனியகாயும் வெள்ளநெடு வேலையிடை மீனம்என விழுங்கித் துள்ளின மரன்பட நெரிந்தன துடித்த வேனில்விளை யாடுசுடரோனின் ஓளிவிம்மும் வானினிடை வீசிய இரும்பணை மரத்தால் தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடியாய வானஇடியால் ஒடியும் மால்வரைகள் மான வேங்கை செற்று மராமரம் வேர்பறித்து ஓங்கு கற்பகம் பூவொடு ஒடிந்துராய் பாங்கர் சண்பகப்பத்தி பறித்து அயல் மாங்கனிப் பணைமட்டித்து மாற்றியே சந்தனங்கள் தகர்ந்தன தாள்பட இந்தனங்களின் வெந்தெரி சிந்திட முந்தனகன் வசந்தன் முகங்கெட நந்தனங்கள் கலங்கி நடுங்கவே காமரம் களிவண்டு கலங்கிட மாமரங்கள் மடிந்தன மண்ணொடு தாம் அரங்க அரங்கு தகர்ந்துக பூமரங்கள் எரிந்து பொரிந்தவே ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும் பானத் தானமும் பாய்பரிப் பந்தியும் |