379 நாகம் ஒன்றிய நல்வரையின்தலை மேல்நாள் ஆகம்வந்தெனை வள்ளுகிர் வாளின் அளைந்த காகம்ஒன்றை முனிந்து அயல் கல்எழுபுல்லால் வேகவெம்படை விட்டது மெல்ல விரிப்பாய் என்னொரு இன்னுயிர் மென்கிளிக்கு யார்பெயர்ஈகேன் மன்ன என்றலும் மாசறு கேகயன்மாது என் அன்னைதன் பெயர்ஆக எனஅன்பினொடு அந்நாள் சொன்ன மெய்ம்மொழி சொல்லுதிமெய்ம்மை தொடர்ந்தோய் சூடையின்மணி கண்மணிஒப்பது தொல்நாள் ஆடையின்கண் இருந்தது பேரடையாளம் நாடிவந் தெனதின் னுயிர்நல்கினை நல்லோய் கோடி என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள் (சூடாமணிப்படலம் 76-78, 83) வந்தெனைக் கரம்பற்றிய வைகல்வாய் இந்த இப்பிற விக்கிரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் அனுமார் அசோகவனம் அழிக்குதல் விருத்தம்-17 -தரு-14 ஈனமுறு பற்றலரை எற்றிஎயில் மூதூர் மீனநிலையத்தின் உறவீசி விழிமானை மானவன் மலர்க்கழலில் வைத்துமிலன் என்றால் ஆனபொழுது எப்பரிசின் நான்அடியன் ஆவேன் என்று நினையாஇரவி சந்திரன் இயங்கும் குன்றம் இருதோளனைய தன்னுருவு கொண்டான் அன்றுலகு எயிற்றிடைகொள் ஏனம் எனலானான் துன்றுகடி காவினை அடிக்கொடு துகைத்தான் முடிந்தன பிளந்தன முரிந்தன நெரிந்த மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த இடிந்தன தகர்ந்தன எரிந்தன கரிந்த ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த |