பக்கம் எண் :

378

வினையுடை அரக்கராம் இருந்தை வெந்துக
சனகிஎன்று ஒருதழல் நடுவண் தங்கலான்
அனகன்கை அம்பெனும் அளவில் ஊதையால்
கனகம் நீடிலங்கைநின் றுருகக் காண்டியால்

தாக்கிகல் இராவணன் தலையில் தாவின
பாக்கியம் அனையநின் பழிப்பில் மேனியை
நோக்கிய கண்களை நுதிகொள் மூக்கினால்
காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ணக்காண்டியால்

மேலுற இராவணன் அழிந்து வெள்கிய
நீலுற திசைக்கரி திரிந்து நிற்பன
வாலுற அனையவன் தலையை வௌவிவில்
காலுற கணைதடிந்து இடுவ காண்டியால்

நீர்த்தெழு கணைமழை வழங்க நீலவான்
வேர்த்த தென்றி டையிடை வீசும் தூசுபோல்
போர்த்தெழு பொலங்கொடி இலங்கை பூழியொடு
ஆர்த்தெழு கழுதிரைத்து ஆடக் காண்டியால்

செப்புறல் என்பல தெய்வ வாளிகள்
இப்புறத் தரக்கரை முருக்கி ஏகின
முப்புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்
அப்புறத்து அரக்கரும் அவியக் காண்டியால்

ஈண்டொரு திங்கள்இவ் இடரின்வைகுதல்
வேண்டுவ தன்றுயான் விரைவின் வீரனைக்
காண்டலே குறைபினும் காலம் வேண்டுமோ
ஆண்டகை இனிஒரு பொழுதும் ஆற்றுமோ
       (சூடாமணிப்படலம் 52-56, 58, 62, 65, 66)

சீதாதேவி அனுமாருக்கு அடையாளம் ஈதல்

கொச்சகம்-2 - தரு-13

சேறிஐய விரைந்தனை தீயவை எல்லாம்
வேறியான் இனிஒன்று விளம்புவென்
கூறுகின்றன முன்குறியுற்றன கோமாற்கு
ஏறும் என்றிவை சொல்லினள் இன்சொல் இசைப்பாள்