377 ஆதலான் அதுகாரியம் அன்று ஐய வேத நாயகன்பால் இனி மீண்டனை போதல் காரியம் என்றனள் பூவைஅக் கோதி லானும் இனையன கூறினான் (சூடாமணிப் படலம் 12-26) அனுமார் சீதாதேவிக்குத் திடம் கூறல் விருத்தம்-16-தரு-12 சின்னாள் நீயிடர் தீராதாய் இன்னா வைகலின் எல்லோரும் நன்னாள் காணுதல் நன்றன்றோ உன்னால் நல்லறம் உண்டானால் புளிக்கும் கண்டகர் புண்ணீருள் குளிக்கும் பேய்குடையுந் தோறும் ஒளிக்கும் தேவர் உவந்துள்ளம் களிக்கும் நல்வினை காணாயோ ஊழியின் இறுதியின் உரும் எறிந்தென கேழ்கிளர் சுடுசுணை கிழித்த புண்பொழி தாழிருங் குருதியால் தரங்க வேலைகள் ஏழும் ஒன்றாக நின்று இரைப்பக் காண்டியால் சூலிரும் பெருவயிறு அலைத்துச் சோர்வுறும் ஆலியம் கண்ணியர் அறுத்து நீத்தன வாலியும் கடக்கரும் வனப்ப வானுயர் தாலியம் பெருமலை தயங்கக் காண்டியால் விண்ணின் நீடிய நெடுங்கழுதும் வெஞ்சிறை எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும் புண்ணின் நீர்ப்புணரியில் படிந்து பூவையர் கண்ணின் நீர்ஆற்றினில் குளிப்பக் காண்டியால் புரையுறு புன்தொழில் அரக்கர் புண்பொழி திரையுறு குறுதியாறு ஈர்ப்பச் செல்வன வரையுறு பிணம்பெரும் பிறக்கம் மண்டின கரையுறு நெடுங்கடல் தூர்ப்பக் காண்டியால் |