பக்கம் எண் :

376

சொல்லி னாற்சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசென்று வீசினேன்

வேறும் உண்டுஉரை கேளதுமெய்ம் மையோய்
ஏறுசேவகன் மேனியல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண்எனக்
கூறும் இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ

தீண்டினான் எனின்இத்தனைச் சேண்பகல்
ஈண்டுமோ உயிர்மெய்யின் இமைப்பின்முன்
மாண்டு தீர்வென் என்றே நிலம்வன் கையால்
கீண்டு கொண்டெழுந் தேகினான் கீழ்மையான்

மேவுசிந்தையில் மாதரைமெய் தொடின்
தேவு வன்தலை சிந்துகநீ எனப்
பூவில்வந்த புராதனனே புகல்
சாவம் உண்டென தாருயிர் தந்ததால்

அன்ன சாவம் உளதென ஆண்மையான்
மின்னும் மோலியன் மெய்ம்மையன் வீடணன்
கன்னி என்வயின் வைத்த கருணையான்
சென்னதுண்டு துணுக்கம் அகற்றுவான்

ஆயதுண்மையின் யானும் அதன்றெனின்
மாய்வென் மன்ற அறம்வழுவா தென்றும்
நாயகன்வலி எண்ணியும் நான்உடைத்
தூய்மையும் காட்டவும் இத்துணை தூங்கினேன்

ஆண்டுநின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது
காண்டி ஐயநின் மெய்யுணர் கண்களால்

தீர்விலேன் இதுஒருப கலும்சிலை
வீரன் மேனியை மானும் இவ்வீங்குநீர்
நார நாள்மலர்ப் பொய்கையை நண்ணுவேன்
சோரும் ஆருயிர் காக்கும் துணிவினால்