375 ஆறுதுயர் அஞ்சொல் இளவஞ்சி அடியன்தோள் ஏறுகடி தென்று தொழுது இன்னடி பணிந்தான் (சூடாமணிப் படலம் 2, 10) சீதை அனுமாருக்கு மறுமொழி கூறல் விருத்தம்-15-தரு-11 அரியதன்றுநின் ஆற்றலுக் கேற்றதே தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே உரியதன்றென ஓர்கின்ற துண்டு அதுஎன் பெரியபேதைமைச் சில்மதிப்பெண் மையால் வேலையின் இடையே வந்து வெய்யவர் கோலி நின்னோடு வெஞ்சரம் கோத்தபோது ஆலம் அன்னவர்க்கல்லை, ஏற்கு அல்லையால் சாலவும் தடுமாறும் தனிமையோய் அன்றியும் பிறிதுள்ளதொன்று ஆரியன் வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி நன்றி என்பது என்வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ கொண்ட போரின்எம் கொற்றவன் விற்றொழில் அண்டர் ஏவரும் நோக்கஎன் ஆக்கையைக் கண்டவா ளரக்கன்விழி காகங்கள் உண்ட போதன்றியான் உளெனவனோ வெற்றிநாணுடை வில்லியர் விற்றொழில் முற்ற நாணில் அரக்கியர் மூக்கொடும் அற்ற நாணினர் ஆயின போதன்றிப் பெற்ற நாணமும் பெற்றியதாகுமோ பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர் என்பு மால்வரை ஆகிலதே எனின் இற்பிறப்பும் ஒழுக்கு இழுக்கமில் கற்பும் யான்பிறர்க் கெங்ஙனம் காட்டுகேன் அல்லல் மாக்கள் இலங்கைய தாகுமோ எல்லைநீத்த உலகங்கள் யாவும் என் |