374 பொன்திணி பொலங்கொடி என்மென்மயிர் பொருந்தித் துன்றிய புயத்தினிதுஇருக்க, துயர்விட்டாய் இன்றுயில் விளைக்க ஓர்இமைப்பின் இறைவைகும் குன்றிடை உனைக்கொடு குதிப்பென் இடைகொள்ளேன் அறிந்திடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல் முறிந்துதிர நூறிஎன் மனச்சினம் முடிப்பேன் நெறிந்தகுழல் நின்நிலைமை கண்டும் நெடியோன்பால் வெறுங்கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன் இலங்கையொடு ஏகுதிகொல் என்னினும் இடந்தென் வலங்கொள்ஒரு கைதலையில்வைத்து, எதிர்தடுப்பான் விலங்கினரை நூறிவரி வெஞ்சிலையினோர்தம் பொலங்கொள்கழல் தாழ்குவென்இது அன்னைபொருளன்றால் அருந்ததி உரைத்தி அழகற்கருகு சென்றுன் மருந்தனையதேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில் பெருந்துயரினோடும் ஒருவீடுபேறு கில்லாள் இருந்தனள் எனப்பகரின் என்அடிமை என்னாம் புண்தொடர் வசுற்றிய புயத்தினொடு புக்கேன் விண்டவர் வலத்திதையும் விரித்துரை செய்கேனோ கொண்டுவரு கிற்றிலென் உயிர்க்குறுதி கொண்டேன் கண்டுவரு கிற்றிலென் எனக்கழறுவேனோ இருக்கும்மதில் சூழ்கடி இலங்கையை இமைப்பின் உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா முருக்கி நிருதக்குலம் முடித்து வினைமுற்றிப் பொருக்க அகல்க எனனினும் அதுஇன்று புரிகின்றேன் இந்துநுதல் நின்னொடிவண் எய்தி இகல்வீரன் சிந்தையுறு வெந்துயர் தவிர்ந்து தெளிவோடும் அந்தமில் அரக்கர்குலம் அற்றவிய நூறி நந்தலில் புவிக்கண் இடர்பின்களைதல் நன்றால் வேறினி விளம்ப உளதன்று விதியால்இப் பேறுபெற என்கண் அருள்தந்தருளுபின் போய் |