பக்கம் எண் :

373

அயர்வுற்று அரிதின் தெளிந்து அம்மலைக் கப்புறத்தோர்
உயர்பொன்கிரி உற்றுளன் வாலிஎன்று ஓங்கல் ஒப்பாள்
துயர்வுற்றவ் இராவணன் வாலிடைப் பண்டுதூங்க
மயர்வுற்ற பொருப்பொடு மால்கடல் தாவிவந்தான்

ஆயானைஓர் அம்பினால் ஆருயிர் வாங்கி அன்பின்
தூயான் வயின் அவ்வரசு ஈந்தவன் சுற்றுசேனை
பேயாய் வருவாய் எனவிட்டனன் மேவுகாறும்
ஏயான் இருந்தான் இடைத்திங்கள் இரண்டிரண்டும்

பின்கூடியசேனை பெருந்திசை பின்னவாக
விற்கூடு நுதல்திரு நின்னிடை மேவஏவித்
தெற்கூடுருவக் கடிதுஏவினன் சேர்ந்தது என்ன
முற்கூடிய கூறினன் காலம்ஓர் மூன்றும்வல்லான்

சுட்டினன் நின்றனன் தொழுதகையினன்
விட்டுயர் தோளினன் விசும்பின் மேக்குயர்
எட்டரு நெடுமுகடெய்த நீளுமேல்
முட்டும் என்றுருவொடு வளைந்த மூர்த்தியான்

முழுவதும் இவ்வுருக் காணமுற்றிய
குழுவிலது உலகுஇனிக் குறுகுவாய் என்றாள்
எழுவினும் எழில்இலங்கு இராமன் தோள்களைத்
தழுவின ளாம்எனத் தளிர்க்கும் சிந்தையாள்

ஆண்டகை அனுமனும் அருளதாம் எனா
மீண்டனன் விசும்பெனும் பதத்தை மீச்செல்வான்
காண்டலுக் கெளியதோர் உருவு காட்டினான்
தூண்டலில் விளக்கனாள் இனைய சொல்லினாள்
  (உருக்காட்டுப்படலம் 74-78, 81, 82, 84, 85, 90, 92-94, 99, 107, 108)

அனுமார் சீதாதேவியை வரங்கேட்குதல்

விருத்தம்-14

கேட்டியடியேனுரை முனிந்தருளல்; கேளான்
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினையன்றால்
ஈட்டிஇனி என்பல இராமன் எதிர் நின்னைக்
காட்டி அடிதாழ்வென் அதுகாண்டி இதுகாலம்