பக்கம் எண் :

372

தேண்டிநேர் கண்டேன் வாழி தீதிலன் எங்கோன் ஆகம்
பூண்டமெய் உயிரேபோகப் பொய்யுயிர் போல நின்ற
ஆண்டகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவுண்டாமோ
ஈண்டுநீ இருந்தாய் ஆண்டங்கு எவ்வுயிர் விடும் இராமன்?

அந்நிலை யாயஅண்ணல் ஆண்டுநின்று அன்னைநின்னை
துன்னிரும் காணும்யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன்னுயிரின்றி ஏகும்இயந்திரப் படிவம்ஒப்பான்
தன்னுயிர் புகழ்க்குவிற்ற சடாயுவைவந்து சார்ந்தான்

எவ்வழி ஏகியுற்றான் யாண்டையான் உரையுள்யாது
செவ்வியோய் கூறுகென்னச் செப்புவான் உற்றசெவ்வி
வெவ்விய விதியின்கொட்பால் வீடினன் கழுகின்வேந்தன்
எவ்விய வரிவிற் செய்கை இருவரும் இடரின் வீழ்ந்தார்

அயர்த்தவர் அரிதின்தேறி ஆண்தொழில் தாதைக்கு ஆண்டுச்
செயத்தகு கடன்மை யாவும்தேவரும் மருளச் செய்தார்
கயத்தொழில் அரக்கன்தன்னை நாடிநாம் காண்டும்என்னா
புயல்தொடு குடுமிக்குன்றும் கானமும் கடிதுபோனார்

கன்மத்தை ஞாலத்தவர் யார்உளரே கடப்பார்
பொன்மொய்த்த தோளான்மயல் கொண்டு புலன்கள் வேறாய்
நன்மத்தம் நரகத்தயல் சூடிய நம்பனேபோல்
உன்மத்தன் ஆனான்தனை ஒன்றும் உணர்ந்திலாதான்

போதாயின போதுன் தண்புனல் ஆடல்பொய்யோ
சீதாபவளக் கொடியன்னவள் தேடிஎன்கண்
நீதாதருகிற் றிலையேல் நெருப்பாதி என்னா
கோதாவரி யைச்சினங்கொண்டனன் கொண்டல் ஒப்பான்

வந்தான் இளையானொடு வானுயர் தேரின்வைகும்
நந்தாவிளக்கின் வரும் எம்குலநாதன் வாழும்
சந்தார் தடங்குன்றினில் தன்னுயிர்க் காதலோனும்
செந்தா மரைக்கண்ணனும் நட்டனர் தேவருய்ய

உண்டாயதும் உற்றதும் மற்றும் உணர்த்தி உள்ளம்
புண்தாண்என நோயுற விம்முறு கின்றபோழ்தின்
எண்தான் உழந்திட்டநும் ஏந்திழையாங் கள்காட்டக்
கண்டான் உயிர்போதமும் பேதமும் காண்கிலாதான்