பக்கம் எண் :

371

விருந்தும் எனல்ஆகியது வீயும்உயிர் மீளும்
மருந்தும் எனலாகியது வாழி மணியாழி

இத்தகைய ளாகிஉயிர் ஏமுற விளங்கும்
முத்தநகை யாள்விழியின் ஆலிமுலை முன்றில்
தத்தியுக மென்குதலை தள்ள உயிர்தந்தாய்
உத்தமஎனா இனைய வாசகம் உரைத்தாள்

மும்மையாம் உலகந்தந்த முதல்வற்கும்முதல் வன்தூதாய்
செம்மையால் உயிர்தந்தாய்க்குச் செயல்என்னால் எளியதுண்டோ
அம்மையாய் அப்பனாய அத்தனே அருளின்வாழ்வே
இம்மையே மறுமைதானும் நல்கினை இசையோ டென்றாள்

பாழிய பணைத்தோள் வீர துணையிலேன் பரிவுதீர்த்த
வாழிய வள்ளலே யான் மறுவிலா மனத்தேன் என்னின்
ஊழியோர் பகலாய் ஓதும் யாண்டெல்லாம் உலகம்ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி என்றாள்
                                (உருக்காட்டுப்படலம் 68-72)

அனுமர் சீதை பிரிந்தபின் நடந்த செய்திகள்

அவளுக்கு விவரித்தல்

விருத்தம்-13-தரு-10

உழைக்குலத் தீயமாய உருவுகொண்டுறுதல் செய்தான்
மழைக்கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன்என்பான்
இழைத்தட மார்பத்தண்ணல் எய்யப்போய் வையம் சோர்வான்
அழைத்தபொய்க் குரலின்ஓசை மயக்கியது உன்னை அம்மா

இக்குரல் இளவல் கேளாதொழிக எனஇறைவன் இட்டான்
மெய்க்குரல் சாபம் பின்னைவிளைந்தது விதியின் வெம்மை
பொய்க்குர லின்று பொல்லாப் பொருள்பின்பு மயக்கும்என்பான்
கைக்குரல் வரிவில்லானும் இளையவன் வரவு கண்டான்

கண்டபின் இளையவீரன் முகத்தினாற் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக்கணானும் உற்றது புகலக்கேட்டான்
வண்டுறை சாலைவந்தான் நின்திரு வடிவு காணான்
உண்டுயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கேது ஒன்றோ