370 அல்லல்ஏற்ற கானகத்தும் அழியாநடையை இழிவான மல்லல் ஏற்றின் உளதென்றால் மத்தயானை வருந்தாதோ (உருக்காட்டுப்படலம் 21, 22, 38, 58) சீதாதேவி லட்சணியைத் தரிசித்தல் விருத்தம்-12 - தரு-9 மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய்ப்பேர் தீட்டியது தீட்டரிய கெய்கையது செவ்வே நீட்டிதென நேர்ந்தனன் எனா நெடியகையால் காட்டினன் ஓராழி அதுவாள் நுதலிகண்டாள் இறந்தவர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ மறந்தவர் அறிந்துணர்வு வந்தனர் கொல் என்கோ துறந்தஉயிர் வந்திடை தொடர்ந்ததுகொல் என்கோ திறந்தெரிவ தென்னை கொல் இந்நன்னுதலி செய்கை இழந்தமணி புற்றரவு எதிர்ந்ததெனல் ஆனால் பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் குழந்தையை உயிர்த்த மலடிக்குவமை கொண்டாள் உழந்துவிழி பெற்றதோர் உயிர்ப்பொறையும் ஒத்தாள் வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தரல் தாங்கினள் மலர்க்கண்மிசை ஒற்றினள் தடந்தோள் வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னதெனல் ஆமோ போக்கும் முலைவைத்துற முயங்கும் ஒளிர்நன்னீர் நீக்கிநிறை கண்ணினை ததும்ப நெடுநீளம் நோக்கும் நுவலக்கருதும் ஒன்றும் நுவல்கில்லாள் மேக்கு நிமிர்விம்மலள் விழுங்கலூறுகின்றாள் நீண்டவிழி நேரிழைதன் மின்னின் நிறமெல்லாம் பூண்டதொளிர் பொன்னனைய பொம்மல்நிறம் மெய்யே ஆண்டகைதன் மோதிரம் அடுத்த பொருளெல்லாம் தீண்டளவில் வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ இருந்துபசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுதாகியது அறத்தவரை அண்மும் |