369 அண்ணல்தன் திருமுகம் கமலம் ஆம்எனின் கண்ணினுக் குவமை வேறு யாது காட்டுகேன் தண்மதி ஆய்என உரைக்கத் தக்கதோ விண்ணுடல் பொலிந்தது மெலிந்து தேயுமால் ஆரமும் அகிலும்நீவி அகன்றதோள் அமலன் செவ்வாய் நாரம் உண்டலர்ந்த செங்கோள் நளினம் என்றுரைக்க நாணும் ஈரமுண்டமுதம் ஊறும்இன்னுரை இயம்பா தேனும் மூரல்வெண் முறுவல்பூவாப் பவளமோ மொழியற்பாற்றே? முத்தங்கொல்லோ முழுநிலவின் முறியின் திறனோமுறை அமுதச் சொத்தின்துள்ளி வெள்ளியினம் தொடுத்த கொல்லோ துறையறத்தின் வித்துமுளைத்த அங்குரங்கொல்வேறே சிலகொல்மெய்ம் முகிழ்த்த தொத்தின் தொகைகொல் யாதென்றுபல்லுக் குவமை சொல்லுகேன் எள்ளாநிலத் திந்திரநீலத் தெழுந்த கொழுந்து மரகதத்தின் வள்ளாமுழுமா நிழற்பிரம்பும் வேண்டவேண்டும் மேனியதோ தள்ளாஓதி கோபத்தைக் கௌவவவந்து சார்ந்ததுவும் கொள்ளா வள்ளல்திரு மூக்கிற்கு உவமைபின்னும் குணிப்பாமோ பனிக்கச்சுரத்துக் கரன்முதலோர் கவந்தப்படையும் பல்பேயும் தனிக்கைச்சிலையும் வானவரும் முனிவர்குழுவும் தனஅறனும் இனிக்கட்டழித்த தரக்கர்குலம் என்னும் சுருதிஈரிரண்டும் குனிக்கக் குனித்த புருவத்துக் குவமம்நீயே கோடியால் வருநாள்தோன்றும் தனிமறுவும் வளர்வும்தேய்வும் வாளரவம் ஒருநாள் கௌவும் உறுகோளும் இறப்பும்பிறப்பும் ஒழிவுற்றால் இருநாற் பகலின் இலங்குமதி அலங்கலிருளின் எழில்நிழற்கீழ்ப் பெருநாள் நிற்பின் அவன்நெற்றிப் பெற்றித்தாகப் பெறுமன்னோ நீண்டுகுழன்று நெய்த்திருண்டு நெறிந்து செறிந்து நெடுநீலம் பூண்டுபுரிந்து சரிந்துகடை சுருண்டுபுகையும், நறும்பூவும் வேண்டும் அல்லஎனத்தெய்வ வெறியேகமழும் நறுங்குஞ்சி ஈண்டுசடையாயின தென்றல் மழைஎன்றுரைத்தல் இழிவன்றோ புல்லல்ஏற்ற திருமகளும் பூவும்பொருந்தப் புவிஏழும் எல்லையற்ற நெடுஞ்செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃதின்றி |