பக்கம் எண் :

368

தாங்கணைப் பணிலமும் வளையும் தாங்குநீர்
வீங்கணை பணிமிசை மேகம் அன்னவன்
பூங்கணைக் காற்கொரு பரிசுதான் பொரு
ஆம்கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே

அறங்கிளர் பறவையின் அரசன் ஆடெழில்
பிறங் கெருத்தணைவன பெயரும் பொற்புடை
மறங்கிளர் மதகரிக் கரமும் நாணின
குறங்கினுக் குவமை இவ்வுலகில் கூடுமோ

வலஞ்சுழித் தொழுகுநீர் வழங்கு கங்கையின்
பொலஞ்சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலஞ்சுழித் தெழுமணி உந்திநேர் இனி
இலஞ்சியும் போலும் வேறுஉவமையாண்டரோ

பொருவரு மரகதப் பொலன் கொள்மால்வரை
வெருவுற விரிந்துஉயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவற நோற்றனள் என்னின் பின்னைஅத்
திருவனின் திருவுளார் யாவர் தெய்வமே

நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின்
கோடுறு கரம்எனச் சிறிது கூறலாம்
தோடுறு பலரெனச் சுரும்பு சுற்றுஅறாத்
தாள்தொடு தடக்கைவே றுவமை சாலுமோ

பச்சிலைத் தாமரை பகல்கண்டால் எனக்
கைச் செறிமுகிழ் உகிர் கனகன் என்பவன்
வச்சிரயாக் கையை வகிர்ந்தவன் தொழில்
நிச்சயம் அன்றெனின் ஐயம் நீக்குமே

திரண்டில ஒளியில திருவின் சேர்வில
முரண்டரு மேருவில் முரியமூரி நாண்
புரண்டில புகழ் இல பொருப்பென்று ஒன்றுபோன்று
இரண்டில புயங்களுக்கு உவமம் ஏற்குமோ

கடற்படு பனிலமும் கன்னிப் பூகமும்
மிடற்றினுக் குவமை என்றுரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ உரகப் பள்ளியான்
இடத்துறு சங்கம் ஒன்றிருக்க எங்களால்