367 அனுமார் ஸ்ரீராமரை வர்ணித்தல் விருத்தம்-11 - தரு-8 ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறெனா சாதல் காப்பவரும் என்தவத்தின் சாம்பினார் ஈதலா திடமும் வேறில்லை என்றொரு போதுலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள் கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான் கொண்டனன் துணுக்கம் மெய்தீண்டக் கூசுவான் அண்டர்நாயகன் அருள்தூதன் யான்எனா தொண்டைவாய் மயிலினைத் தொழுது தோன்றினான் படிஉரைத் தெடுத்துக்காட்டும் படித்தன்று படிவம் பண்பின் முடிவுள உவமமெல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் துடியிடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்திஎன்னா அடிமுதல் முடியின் காறும் அறிவுற அனுமன் சொல்வான் சேயிழைத் தாமரை என்று சேண்உளோர் ஏயினர் அதன்துணை எளியதில்லையால நாயகன் திருவடி குறித்து நாட்டுறின் பாய்திரைப் பவளமும் குவளைப் பண்பிற்றால் தளங்கெழு கற்பகமுகிழும் தண்துறை இளங்கொடிப் பவளமும் கிடக்க என்அவை துளங்கொளி விரற்கெதிர் உதிக்கும் சூரியன் இளங்கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்திழாய் சிறியவும் பெரியவுமாகித் திங்களோ மறுஇல பத்துளஅல்ல மற்றினி எறிசுடர் வயிரமோ திரட்சி எய்தில அறிகிலென் உகிர்க்குயான் உவமமாவன பொருந்தில நிலனொடு போந்து கானிடை வருந்தின எனினது நூலை மாறுகொண்டு இருந்தது நின்றது புவனம் யாவையும் ஒருங்குடன் புணர அஃது உரைக்கற் பாலதோ |