366 உருமேறு உமிழ்வெஞ்கிலை நாண்ஒலிதான் வருமே? உரையாய் வலியார் வலியே வாரா தொழியான் எனும் வன்மையினால் ஓராயிர கோடி இடர்க்கு உடையேன் தீராய்ஒரு நாள்வலி சேவகனே நாரா யணனே தனிநாயகனே தருவொன்றிய கானடைவாய் தவிர்நீ வருவென்சில நாளினில் மாநகர் வாய் இருவென்றனை இன்னருள்தான் இதுவோ ஒருவேன்தனி ஆவியை உண்ணுதியோ பேணும் உணர்வே உயிரே பெருநாள் நாணின் றுழல்வீர் தனிநாயகனைக் காணும் துணையும் கழிவீர் அலீர்நான் பூணும் பழியோடு பொருந்துவதோ பொறைஇருந் தாற்றிஎன் உயிரும் போற்றினேன் அறையிருங் கழலவற் காணும் ஆசையால் நிறையிரும் பல்பகல் நிருதர் நீள்நிகர் சிறையிருந் தேனைஅப் புனிதன் தீண்டுமோ பிறன்மனை எய்திய பெண்ணைப் பேணுதல் திறனலது என்றுயிர்க் கிறைவன் தீர்ந்தனன் புறனலர் அவனுறப் போது போக்கியான் அறனலது ஆற்றுவேன் என்கொண்டாற்றுகேன் வருந்தலில் மானமா அனையமாட்சியர் பெருந்தவம் மடந்தையர் முன்பு பேதையேன் கருந்தனி முகிலினைப் பிரிந்து கள்வரூர் இருந்தவள் இவள்என ஏசநிற்பெனோ (உருக்காட்டுப்படலம் 1, 3, 6-9, 11, 14, 17, 19) |