பக்கம் எண் :

365

அங்கண்மா ஞாலமும் விசும்பும் அஞ்சவாழ்
வெங்கணாய் புன்தொழில் விலக்க உட்கொளாய்
செங்கண்மால் நான்முகன் சிவன்என்றே கொலாம்
எங்கள் நாயகனையும் நினைத்தது ஏழைநீ

மானுயர் இவரென மனங்கொண் டாயெனின்
கானுயர் வரைநிகர் கார்த்த வீரியன்
தானொரு மனிதனால் தளர்ந்துளான் எனின்
தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால்

இருவர்என்றி கழ்ந்தனை என்னின் யாண்டுஎல்லை
ஒருவனன்றே உலகழிக்கும் ஊழியான்
செருவரும் காலைஎன் மெய்ம்மை தேர்தியால்
பொருவருந் திருவிழந்து அநாயம் பொன்றுவாய்

கடிக்கும்வல்லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை
அடுக்கும்ஈது அடாதுஎன்று ஆன்றஏதுவோ டறிவுகாட்டி
இடிக்குநர் இல்லைஉள்ளார் எண்ணியது எண்ணிஉன்னை
முடிக்குநர் என்றபோது முடிவன்றி முடிவதுண்டோ
                          (காட்சிப்படலம் 111, 113, 124, 132)

சீதாதேவி தனியே புலம்பல்

விருத்தம்-10 - திபதை - 4

போயினன் அரக்கன் பின்னை பொங்கரா நுங்கிக்கான்ற
தூயவெண் மதியம்ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றித்
தீயவல்லரக்கி மார்கள் தெழித்திழித்து உரப்பிச்சிந்தை
மேயினவண்ண மெல்லாம் விளம்புவான் உடன்றுமிக்கார்
                                            (காட்சிப்படலம் 147)

காண்டற் கொத்த காலமும் ஈதே தெறுகாவல்
தூண்டற் கொத்த சிந்தையினாரும் துயில்கில்லார்
வேண்டத்துஞ்சார் என்றொரு விஞ்சை வினை செய்தான்
மாண்டற்குற் றாராம்என எல்லாம் மயர்வுற்றார்

கருமேகம் நெடுங்கடல் காஅனையான்
தருமே தமியேன் எனாருயிர்தான்