364 அஞ்சினை ஆதலான் அன்றுஆரியன் அற்றம் நோக்கி வஞ்சனை மானொன்றேவி மாயையால் மறைந்து வந்தாய் உஞ்சனை போதியாயின் விடுதியுன்குலத் துக்கெல்லாம் நஞ்சினை எதிர்ந்தபோது நோக்குமே நினது நாட்டம் பத்துளதலையும் தோளும் பலபல பகழிதூவி வித்தகவில்லி னாற்குதிரு விளையாடற்கு ஏற்ற சித்திர இலக்கமாகும் அல்லது செருவில் ஏற்கும் சத்தியைப் போலும் மேனாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் தோற்றனை பறவைக்கன்று துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் வாளால் வென்றாய் அன்றெனின்இறத்தி யன்றே நோற்ற நோன்புடைய வாழ்நாள் வரமிவை நுனித்தவெல்லாம் கூற்றினுக் கன்றேவீரன் சரத்திற்கும் குறித்ததுண்டோ பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை வரனும் பின்னும் மற்றுடை எவையும்தந்த மலரயன் முதலோர் வார்த்தை விற்றொடை இராமன்கோத்து விடுதலும் விலக்குண்டெல்லாம் இற்றிடைந் திறுதல் மெய்யே விளக்கின்முன் இருளுண்டாமோ குன்றுநீ எடுத்தநாள்தன் சேவடிக் கொழுந்தால் உன்னை வென்றவன் புரங்கள் வேவத்தனிசரம் துரந்தமேரு என்றுணைக் கணவன் ஆற்றற்கு உரணிலாதிற்று வீழ்ந்த அன்றெழுந் துயர்ந்தஓசை கேட்டிலை போலும் அம்மா மலைஎடுத் தெண்டிசை காக்கும் மாக்களை நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும்நீ சிலைஎடுத் திளையவன் நிற்கச் சேர்ந்திலை தலைஎடுத் தின்னமும் மகளிர்த் தாழ்தியோ ஏழைநின் ஒளித்துரை இன்னதாம் என வாழிஎங் கோமகன் அறிய வந்தநாள் ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ ஊழியும் திரியும் உன்னுயிரொடு ஓயுமோ வெஞ்சின அரக்கரை வீய்த்து வீயுமோ வஞ்சனை நீசெய வள்ளல் சீற்றத்தால் எஞ்சலில் உலகெலாம் எஞ்சும் எஞ்சுமென்று அஞ்சுகின் றேனிதற்கு அறனும் சான்றரோ |