363 பொருளும் யாழும் விளரியும் பூவையும் மருள நாளும் மழலை வழங்குவாய் தெருளும் நான்முகன் செய்தது உன்சிந்தையின் அருளும் மின் மருங்கும் அரிதாக்கியோ ஈண்டுநாளும் இளமையும் மீண்டில மாண்டு மாண்டு பிறிதுறும் மாலைய வேண்டுநாள் வெறிதே விளிந்தால்இனி யாண்டு வாழ்வது இடருழந்து ஆழ்தியோ இழவெனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக குழைமுகத்துநின் சிந்தனை கோடினால் பழகநிற்புறும் பண்பிவை காமத்தோடு அழகினுக்கு இனியாருளர் ஆவரே தேவர் தேவியர் சேவடிகை தொழும் தாவில் மூவுலகின் தனிநாயகம் மேவுகின்றது நுங்கண் விலக்கினை ஏவர் ஏழையர் நின்னின் இலங்கிழாய் குடிமை மூன்றுலகும் செய்யும் கொற்றத்துஎன் அடிமை கோடி அருளுதியால் எனா முடியின்மீது முகிழ்த்துயர் கையினன் படியின் மேல்விழுந்தான் பழிபார்க்கலான் (காட்சிப்படலம் 73, 86, 94, 97, 99, 105, 109, 110) சீதாதேவி இராவணனை இடித்தல் விருத்தம்-9-தரு-7 காய்ந்தன சலாகையன்ன உரைவந்து கதுவாமுன்னர் தீய்ந்தன செவிகள் உள்ளம்திரிந்தது சிவந்தசோரி பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு ஏய்ந்தன அல்லவெய்ய மாற்றங்கள் இனையசொன்னாள் மேருவை உருவல்வேண்டின் விண்பிளந்து ஏகல் வேண்டின் ஈரெழு புவனம்யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின் ஆரியன் பகழிவல்லது அறிந்திருந்து அறிவிலாதாய் சீரியஅல்ல சொல்லித் தலைபத்தும் சிந்துவாயோ |