பக்கம் எண் :

362

மந்தர கீதத்து இசைப்பதம் தொடர
     வகையுறு கட்டளை வழாமல்
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின்
     பாடலார் அருகுவந் தாட

ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும்
     அல்லவும் வேறயல் அகல
மேயினன் பெண்ணின் விளக்கெனத் தகையாள்
     இருந்துழி ஆண்டவள் வெருவிப்

போயின உயிரளாம் எனநடுங்கிப்
     பொறிவரி எறுழ்வலி புகைக்கண்
காய்ச்சின உழுவை தின்னிய வந்த
     கலையிளம் பிணைஎனக் கரைந்தாள்

அவ்விடத்து அருகெய்தி அரக்கன் தான்
எவ்விடத்து எனக்கின்னருள் ஈவது
நொவ்விடைக் குயிலே நுவல்க என்றனன்
வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான்

இன்றிறந்தன நாளை இறந்தன
என்திறம் தரும் தன்மையிதால், எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோகுழை
சென்றிறங்கி மறந்தரு செங்கணாய்

உலகம்மூன்றும் ஒருங்குடன் ஓம்பும்என்
அலகில் செல்வத்து அரசியல் ஆணையில்
திலகமே உன்திறத்து அனங்கன்தரு
கலகமல்லது எளிமையும் காண்டியோ

பூந்தண் வார்குழல் பொன்கொழுந்தே புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன்னுயிர்க்
காந்தன் மாண்டிலன் காடுகடந்து போய்
வாய்ந்து வாழ்வது மானுடவாழ்வன்றோ

நோற்கின் றார்களும் நுண்பொருள் நுண்ணிதின்
பார்க்கின் றாரும் பெறும்பயன் பார்த்தியேல்
வார்க்குன்றாமுலை என்சொல் மவுலியால்
ஏற்கின் றாரொடு உடன்உறை இன்பமால்