பக்கம் எண் :

361

மன்னவன் தேவிஅம்மயன் மடந்தைதன்
பின்னவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன
துன்னரும் சுடர்சுடச் சுறுக்கென்று ஏறிற்றால்
இன்னல் உண்டு எனுமிதற் ஏது என்பதே

என்றனள் இயம்பிவேறு இன்னும் கேட்டியால்
இன்றிவண் இப்பொழுது இறையந்ததோர் கனா
வன்றுணைக் கோளரி இரண்டு மாறிலாக்
குன்றிடை உழுவையம் குழுக்கொண்டீண்டியே

உரம்பொரு மதகரி உறையும் அவ்வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
வரம்பறு பிணம்படக் கொன்று மாறிலாப்
புரம்புக இருந்ததோர் மயிலும் போயதால்

ஆயிரம் திருவிளக் கமைய மாட்டிய
சேயொளி விளக்கமொன் றேந்திச் செய்யவள்
நாயகன் திருமனைநின்று நண்ணுதல்
மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய்

பொன்மனை புக்கஅப் பொருவில் போதினில்
என்னைநீ உணர்த்தினை முடிந்ததில் என
அன்னையே அதன்குறை காண்என் றாயிழை
இன்னமும் துயில்கென இருகை கூப்பினாள்
                                    (காட்சிப்படலம் 39-53)

சீதாதேவிபக்கல் இராவணன் குறையிரத்தல்

விருத்தம்-8 - திபதை-3

என்றிவை இனையன எண்ணி வண்ணவான்
பொன்திணி நெடுமரப்பொதும்பர் புக்குஅவண்
நின்றனன் அவ்வழி நிகழ்ந்தது என்எனின்
துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் தோன்றினான்

தந்திரி நெறியில் தாக்குறு கருவி
     தூக்கினர் எழுவிதச் சுதியின்
முந்துறு குணிலொடு இயைவுறு குறட்டில்
     சில்லரிப் பாண்டிலில் முறையின்