பக்கம் எண் :

360

மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும்
புக்கனர் அப்புலம் போந்ததில் லையால்
சிக்கற நோக்கினென் தீய இன்னமும்
மிக்கன கேட்கஎன விளம்பல் மேயினாள்

ஆண்டகை இராவணன் வளர்க்கும் அவ்வனல்
ஈண்டில பிறந்தவால் இனங்கொள் செஞ்சிதல்
துண்டரு மணிவிழக்கழலும் தொல்மனை
கீண்டதால் வானஏறு எறியக் கீழைநாள்

பிடிமதம் பிறந்தன பிறங்கு பேரியும்
இடியென முழங்குமால் இரட்டல் இன்றியே
துடியுடை முகிற்குலம் இன்றித் தாவில்வான்
வெடிபட அதிருமால் உதிரும் மீன்எலாம்

விற்பகல் இன்றியே இரவு விண்டற
எற்பகல் எறிந்துளது என்னத் தோன்றுமால்
மற்பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு நாறுமால்

திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கெலாம்
எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியமால் மங்கல கலசம் சிந்தின
விரியுமால் விளக்கினை விழுங்கு மாலிருள்

தோரணம் முறியுமால் துளங்கிச் சூழிமால்
வாரணம் முறியுமால் வளத்த வான்மருப்பு
ஆரண மந்திரத்தறிஞர் நாட்டிய
பூரண குடத்துநீர் நறவு நாறுமால்

விண்தொடர் மதியினைப் பிளந்து மீனெழும்
புண்தொடர் குருதியின் பொழியுமால் மழை
தண்டொடு திகிரிவாள் தனுவென்றின்னை
மண்டமர் புரியுமால் ஆழிமாறுற

மங்கையர் மங்கலத்தாலி மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரு மின்றியே
கொங்கையின் வீழ்ந்தனகுறித்த ஆற்றினால்
இங்கிதன் அற்புதம் இன்னும் கேட்டியால்